49. தனித்து உண்ணுதல் தகாது

 “தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் என்று இவரோடு

இன்புறத் தான் உண்டல் இனிதாமே; - அன்புறவே

தக்கவரை இன்றித் தனித்து உண்டல், தான்கவர்மீன்

கொக்கு அருந்தல் என்றே குறி.” -- நீதிவெண்பா.


பிதிரர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார் என்று சொல்லப்பட்ட இந்த நான்கு பேர்களுடன் இன்பம் மிகும்படி ஒருவன் உண்பதுதான் நல்லதாகும்.  அன்பு பொருந்தச் சேர்ந்து உண்பதற்குத் தகுந்தவர்களான அந் நான்கு பேரும் இல்லாமல், தான் மட்டும் தனியாக உண்ணுதல், கொக்கு தான் பிடித்த மீனைத் தனியே இருந்து தின்பதனோடு ஒக்கும் என்றே எண்ணுக.


(தென்புலத்தார் - பிதிரர், மாண்ட மூதாதையர். விருந்து - புதியவராக வந்தவர்.  ஒக்கல் - உறவினர். தக்கவரை - தக்க அவரை, தகுதி வாய்ந்தவர்களை.)


No comments:

மூலம் 18

 “பொய்யாமை பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார் வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை, ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல் பேர்த்துஉ...