48. ஞானிக்குத் துன்பம் இல்லை - துட்டனுக்கு இன்பம் இல்லை

 “தூய அறிவினர்முன் சூழ்துன்பம் இல்லையாம்;

காயும் விடம் கருடர்க்கு இல்லையாம்; - ஆயுங்கால்,

பன்முகன்சேர் தீமுன் பயில்சீதம் இல்லையாம்;

துன்முகனுக்கு உண்டோ சுகம்.” -- நீதிவெண்பா


ஆராய்ந்து பார்க்குமிடத்து, கொல்லுகின்ற பாம்பின் விடம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை.  அதுபோல, நல்ல அறிவு உடையோருக்கு வரும் துன்பம் ஒன்றும் தீமை செய்வதில்லை.  நாலாபக்கங்களிலும் சுடர்விட்டு எரியும் நெருப்பின் முன் குளிர்ச்சி ஏதும் இல்லை. அதுபோல, தீவினையாருக்கு இன்பம் என்பது உண்டோ? (இல்லை.)


No comments:

மூலம் 18

 “பொய்யாமை பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார் வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை, ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல் பேர்த்துஉ...