52. சாவு வரும் முன் சிவனை வழிபடு

 “அரசின் இலையதனின் அக்கிரமத் தினின்று

விரைய விழுதுளியே போலும், - புரையுடைய

ஆக்கைவிடா முன்னம் அரன்பாதம் பூசித்தல்,

நோக்கல்,நன்று என்றே நவில்.” -- நீதிவெண்பா.


அரசிலையின் நுனியிலிருந்து விரைந்து விழுகின்ற நீர்த் துளியைப் போல, குற்றமுடைய இவ் உடல் அழிவதற்கு முன்னதாகவே சிவபெருமான் திருவடியை வணங்குதலும், திருவடியைக் கண்டு மகிழ்தலும் நல்லது என்றே சொல்.


(அக்கிரம் - நுனிப் பாகம். புரை - குற்றம். ஆக்கை - உடம்பு.  அரன் - சிவன்.)


No comments:

மூலம் 18

 “பொய்யாமை பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார் வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை, ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல் பேர்த்துஉ...