“தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தார்
குற்றம் கடிந்த ஒழுக்கமும், - தெற்றெனப்
பல்பொருள் நீங்கிய சிந்தையும், இம்மூன்றும்
நல்வினை ஆர்க்கும் கயிறு.” -- திரிகடுகம்.
அறநெறியில் வந்த பொருளைத் தக்கார்க்கு மனம் உவந்து கொடுத்தலாகிய தானத்தைப் புரிகின்ற பெருஞ் செய்கையும்; பழிக்கு நாணுதலை உடையாரது குற்றத்தினின்று நீங்கிய நல்லொழுக்கமும்; தெளிவாகப் பல பொருள்கள் மேலும் செல்லுகின்ற சிந்தையை ஒழித்தலும் ஆகிய இம் மூன்று நற்பண்புகளும் அறத்தின் பயனை நீங்காது கட்டுகின்ற கயிறு ஆகும்.
No comments:
Post a Comment