46. பொருட்பற்று துன்பம் தரும்

“இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே,

பின் அதனைப் பேணுதலும் துன்பமே, - அன்னது

அழித்தலும் துன்பமே, அந்தோ! பிறர்பால்

இழத்தலும் துன்பமே ஆம்.” -- நீதிவெண்பா


    துன்பத்தைத் தரக் கூடிய செல்வத்தைச் சம்பாதித்தாலும் துன்பம்.  அங்ஙனம் சம்பாதித்த பின்பு அச் செல்வத்தைக் காத்தலும் துன்பமே.  அப்படி ஈட்டிய பொருளைச் செலவழித்தலும் துன்பமே. அந்தோ, அதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போதலும் துன்பமே தருவதாகும்.


No comments:

055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை ...