கடுகம் 14

“இழுக்கல் இயல்பிற்று இளமை, பழித்தவை

சொல்லுதல் வற்றாகும் பேதைமை, - யாண்டும்

செறுவொடு நிற்கும் சிறுமை,இம் மூன்றும்

குறுகார் அறிவுடை யார்.”    -- திரிகடுகம்.


இளமைப் பருவம் வழுவுதலை இயல்பாக உடையது. அறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளைச் சொல்லுதல் பேதைமை ஆகும். ஈனத்தன்மை என்பது எக்காலத்தும் சினத்தோடு நிற்பதாகும். ஆதலால், இம் மூவகையினரையும் மேல் விளைவை அறியும் அறிவுடையார் நெருங்கமாட்டார். 


No comments:

பொது --- 1127. பத்தேழு எட்டு

 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பத்தேழு எட்டு (பொது) முருகா! பொய்ப்பொருளைத் தேடி அலையாமல், மெய்ப்பொருளை நாடி இருக்க அருள் புரிவாய். தத்தா...