கல்வி அழகே அழகு

 


கல்வி அழகே அழகு.

-----

 

     "கல்வி" என்னும் சொல், "கல்" என்னும் வேர்ச் சொல்லைக் கொண்டு வந்தது. "கல்" என்றால்வெட்டி எடுஅகழ்ந்து போக்குதோண்டி எடுபயில் என்று பொருள்.

 

     நம்மிடம் அநாதியாகவே உள்ள அறியாமையை அகற்றிஅறிவைப் புகுத்துவதற்குப் பயன்படுவது, "கல்வி" எனப்பட்டது.  உலகியல் நூல்களைப் படிப்பதால் உண்டாவது உண்மை அறிவு அல்ல. அறிவு நூல்களைக் கற்பதால் உண்டாவதே உண்மை அறிவு. அறிவுக்கு எல்லை இல்லை. அறிவு வளரவளரஆணவம் குன்றும். அன்பு பெருகும்.

 

     உள்ளத்தில் படிவது படிப்பு. உள்ளத்தில் உள்ள குற்றத்தைக் கல்லி எடுப்பது கல்வி. உள்ளத்தை உருகச் செய்வது ஓதுவது. கல்வியால் அறிவு வளரவேண்டும். அந்த அறிவுபிற உயிர்களுக்கு உண்டாகும் துன்பத்தையும் தனது என்று எண்ணும் பக்குவத்தை உண்டுபண்ணும். இல்லையேல்,அறிவால் பயன் இல்லை. அது பயனற்ற அறிவாகும்.

 

"அறிவினால் ஆகுவது உண்டோபிறிதின் நோய்

தன்நோய் போல் போற்றாக் கடை"

 

என்று நாயனார் அருளிய திருக்குறள் தெளிவிக்கும்.

 

     கல்வி கல்லாமையால் உண்டாகும் தீமை குறித்து, "கல்லாமை" என்னும் அதிகாரத்தில் விளக்கி அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

     உயர்ந்த குடியில் பிறந்துசிறந்த உருவமும்பருவமும் அமைந்து இருந்தாலும்,அவன் மணமில்லாத மலரைப் போல ஓளி (புகழ்பெருமை) இழந்து நிற்பான் என்கின்றனர் பெரியோர் எல்லாம்.

 

மண்ணில் செய் பாவை மீது 

     வயங்குபொன் பூச்சோ?தண்பூங்

கண்ணியை மாற்றில் சூடும் 

     காட்சியோ?பழம் பாண்டத்தில்

பண்ணிய கோலமோநற் 

     பண்பொடு ஞானம் கல்வி

புண்ணியம் ஏதும் இல்லான் 

     பூண்ட பேரெழில் உடம்பே.     --- நீதிநூல்.

            

            நல்ல பண்புகள்மெய்யறிவுஅதற்கேற்ற கல்விநற்செய்கை ஆகிய இவைகள் ஏதும் உள்ளத்தில் இல்லாத ஒருவன்புறத்தில் கொண்டுள்ள உடம்பு அழகானதுமண்ணால் செய்த பொம்மையின் மீது பூசப்பட்ட பொன்வண்ணமோஅழகான மலர்மாலையைத் துடைப்பத்தில் கட்டிக் காணுகின்ற காட்சியோபழைய பாத்திரத்தில் செய்யப்பட்ட அழகோ?

 

     பழைய பாத்திரத்தைப் புதிய பாத்திரம் போல மெருகு ஏற்றுவதைபழைய பாத்திரத்தில் செய்யப்பட்ட அழகு என்றார். "துடைப்பத்திற்குப் பட்டுக் குஞ்சம்" கட்டுவது என்று ஒரு வழக்குச் சொல் உள்ளது. இங்கே துடைப்பத்திற்குப் பூமாலையைச் சூட்டிப் பார்ப்பது என்றார்.

 

     கல்லாதவனது உருவ அழகை இவ்வாறு மேலோர்கள் இழித்துக் கூறினர்.கல்வி இல்லாதவனிடம் சேர்ந்து உள்ள சிறந்த இயற்கை அழகும் கூட இழிவாகவே எண்ணப்படும்.

 

     கல்வி உள்ளத்திற்கு அழகு செய்வது. மற்ற நலங்கள் எல்லாம் உடலை அழகு செய்வன. அவற்றால் உள்ளத்திற்குஅறிவு மயக்கம் உண்டாகுமே தவிரயாதொரு நன்மையும் இல்லை.

 

     அறிவிற்கு மாட்சிமையாவதுநூல்களின் பொருளை விரைவாக உணர்தலும்உணர்ந்தவற்றை மறவாமையும்,அதன் வழி ஒழுகுதலும் ஆகும். உருவினால் அழகு மிக்க உடம்பை ஒருவன் பெற்றிருப்பது அரிதாகையால்,அவனது எழில் நலமும் விரும்பத் தக்கதே. ஆனாலும்நூலறிவு இல்லாதவனுடைய வடிவழகு காலத்தால் அழியக் கூடியது. கல்வி அறிவு அழியாதது. எனவேபுற அழகால் பயனில்லை என்பது சொல்லப்பட்டது. உடல் அழகு தேயும். உள்ள அழகு வளரும்.

 

"நுண்மாண்நுழைபுலம்இல்லான் எழில்நலம்,

மண்மாண் புனை பாவை அற்று".

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     நுண்ணியமாட்சிமை மிக்க அறிவு இல்லாதவனுடைய உடல் அழகு எப்படிப்பட்டது?என்றால்மண்ணால் செய்யப்பெற்ற பொம்மையை அழகு படுத்தியது போன்றது என்கின்றார்.

 

நுண் புலம் --- நுட்பமாய்க் கூர்ந்து ஓர்ந்து உணர்வது.

மாண்புலம் --- மாண்பு உடையதையே மதித்துத் தெளிவது.

நுழைபுலம் --- எதையும் ஊடுருவித் துருவித் தெளிவது.

     

     மற்றவர்க்கு வேண்டுமானால் தனது உடல் அழகே பெரிதாகத் தோன்றலாம். அதனை மேலும் மெருகு ஏற்றிக் கொள்ளலாம். ஆனால்கற்றவர்க்குகல்வியால் உண்டான நலமே சிறந்த அணிகலம் ஆகும். அவருக்கு வேறு அணிகலன்கள் தேவையில்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்.

 

"கற்றார்க்குக் கல்வி நலனே நலன்அல்லால்

மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்;- முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டாயாரே

அழகுக்கு அழகுசெய் வார்".      --- நீதிநெறி விளக்கம்

 

இதன் பொருள் ---

 

     எக்காலத்திலும் முழுமையான மணிகளால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்குஅழகு செய்யவேறு ஆபரணங்கள் தேவையில்லை. யாராவது அழகுக்கு அழகு செய்வார்களாஅது போலநன்கு கற்றவர்க்கு,கல்வியால் உண்டாவதே அழகு. அவருக்கு அழகு செய்ய வேறு ஓர் அணிகலன் வேண்டுவது இல்லை.

 

குஞ்சி அழகும்,கொடுந்தானைக் கோட்டு அழகும்,

மஞ்சள் அழகும்,அழகு அல்ல;- நெஞ்சத்து

நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.               --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     வாரி விடப்பட்ட கூந்தல் அழகும்நன்கு உடுத்தப்பட்ட அழகிய கரையோடு கூடிய வண்ண உடை அழகும்முகத்தில் ஒப்பனையாகப் பூசப்படுகின்ற மஞ்சளின் அழகும்ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன அல்ல. உள்ளத்தால் நல்லவராய் வாழுகின்றநடுநிலை தவறாத வழியில் ஒருவனைச் செலுத்துகின்ற கல்வியே சிறந்த அழகு ஊட்டும் அணிகலம் ஆகும்.

 

     நல்லொழுக்கம் பயக்கும் கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.

 

     இப் பாடல் பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதாக எண்ணவேண்டாம். தலைமயிர் அழகுஉடை அழகு இரண்டும் ஆண்பெண் இருபாலர்க்கும் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளுக. 

 

"மயிர்வனப்பும்,கண்கவரும் மார்பின் வனப்பும்,

உகிர்வனப்பும்காதின் வனப்பும், --- செயிர்தீர்ந்த

பல்லின் வனப்பும்வனப்புஅல்லநூற்குஇயைந்த

சொல்லின் வனப்பே வனப்பு".          --- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் ---

 

     தலைமயிரால் உண்டாகும் அழகும்,கண்டவர் கண்களைக் கவர்தற்கு உரியஎடுப்பான மார்பினால் உண்டாகும் அழகும்நகத்தால் உண்டாகும் அழகும்,காதினால் உண்டாகும் அழகும்குற்றம் நீங்கின(வெண்மையான) பல்லினால் உண்டாகும் அழகும்அழகு அல்லகற்ற நூல்களுக்குப் பொருந்தியசொல்லின் அழகே அழகு ஆகும்.

 

     புற அழகு நாளாக நாளாகக் குன்றும். அக அழகு எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

     கல்லாமையால் உண்டாகும் இழிவை எடுத்துக் காட்டவே இவ்வளவும் சொல்லப்பட்டது. புற அழகு கூடாது என்று சொல்லப்பட்டவில்லை. புற அழகோடுகல்வி அறிவினால் உண்டாகும் உள்ளத்தின் அழகும் தேவை என்பதே சொல்லப்பட்டது.

 

"இடைவனப்பும் தோள்வனப்பும்,ஈடின் வனப்பும்,

நடைவனப்பும்,நாணின் வனப்பும்,- புடைசால்

கழுத்தின் வனப்பும்,வனப்பு அல்ல;எண்ணோடு

எழுத்தின் வனப்பே வனப்பு".            --- ஏலாதி.

 

இதன் பொருள் ---

 

     இடுப்பின் அழகும்தோள்களின் அழகும்,செல்வத்தின் அழகும்நடக்கின்ற நடையின் அழகும்,நாணத்தின் அழகும்பக்கங்கறில் தசை கொழுவியுள்ள கழுத்தின் அழகும்உண்மை அழகு ஆகாமக்களுக்கு இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகேஉண்மை அழகு ஆகும்.

 

     தனக்கு ஒரு கேடு அல்லது தாழ்வு வந்தபோதுபுற அழகு எவ்விதத்திலும் துணை செய்யாது. கல்வி அறிவு ஒன்றே துணை நிற்கும்.

 

     உடம்பு எடுத்ததன் பயன் கல்வி அறிவு பெறுவதே. உண்பதற்குத்தான் பிறவி எடுத்தோம் என்றால்நிறைய உண்ணுகின்ற விலங்குகளாகவே இருந்திருக்கலாம். 

 

     கல்வி அறிவு இல்லாத உடம்பு பாழான உடம்பு என்கின்றது "நான்மணிக் கடிகை" என்னும் நூல்.

 

"மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை, தான் செல்லும்

திசைக்குப் பாழ் நட்டோரை இன்மை, இருந்த

அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை,தனக்குப் பாழ்

கற்று அறிவில்லா உடம்பு".        ---  நான்மணிக் கடிகை.

 

இதன் பொருள் ---

 

     வாழுகின்ற மனைக்குப் பாழாவதுஒளி பொருந்திய நெற்றியினை உடைய மனையாளை இல்லாமைதான் போகும்ஊர்ப்புறங்கட்குப் பாழாவதுஅவ்விடங்களில் நண்பர்கள் இல்லாமைபலரும் கூடியிருந்த அவைக்குப் பாழாவதுகல்வி கேள்வி முதலியவற்றால் சிறந்த சான்றோரை இல்லாமைபிறவி எடுத்த தனக்குப் பாழாவதுகல்வியறிவு பெறாத வெறும் புலால் உடம்பு உள்ளமையே.

 

     கண் இல்லாத உடல் போலகல்வி அறிவு இல்லாத உயிர் பயனற்றது. கல்லாமையின் இழிவைக் காட்ட இவ்வளவும் சொல்லப்பட்டது. "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்றார் ஔவைப் பிராட்டியார். எனவேகண்ணைப் போன்ற கல்வியைப் போற்றிப் பயிலுவது அவசியம். அதுவே உண்மை அழகைத் தரும்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...