கடுகம் 25

 “செருக்கினால் வாழுஞ் சிறியவனும், பைத்து அகன்ற

அல்குல் விலைபகரும் ஆய்தொடியும், - நல்லவர்க்கு

வைத்த அறப்புறம் கொன்றானும், இம்மூவர்

கைத்து உண்ணார் கற்றறிந் தார். -- திரிகடுகம்


பெரியோரை மதியாமல் இறுமாப்புடன் வாழ்கின்ற அறிவு இல்லாதவனும், படத்தைப் போன்று அகன்ற அல்குலை விலை பகரும் வேசையும், நல்லோர்க்கு என்று அமைத்த அறச் சாலையை அழித்தவனும் ஆகிய இம் மூவரிடமும், அறநூல்களைக் கற்று, அவற்றின் பொருளை உள்ளபடி உணர்ந்து அறிந்தவர் உணவு கொள்ளார்.


மதிக்கத் தக்க பெரியாரை மதிக்காதவன், விலைமாது, நல்லவர் பொருட்டு ஏற்படுத்தப் பெற்ற அறச்சாலையை அழித்தவன் ஆகிய இம் மூவரிடமும் அறிஞர் உணவு கொள்ளல் ஆகாது. 


No comments:

064. அமைச்சு - 08. அறிகொன்று அறியான்

திருக்குறள் பொருட்பால் ஆ. அமைச்சியல் அதிகாரம் 64 -- அமைச்சு இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "அறிந்து சொல்லினவரது அறிவை...