“பெருங்குணத்தார்ச் சேர்மின், பிறன்பொருள் வௌவன்மின்,
கருங்குணத்தார் கேண்மை கழிமின், - ஒருங்குஉணர்ந்து
தீச்சொல்லே காமின், வரும் காலன் திண்ணிதே,
வாய்ச்சொல்லே அன்று வழக்கு.” -- சிறுபஞ்சமூலம்.
நன்மைக் குணம் உடையவர்களைச் சென்று அடையுங்கள். பிறர் பொருளை வஞ்சகத்தால் கொள்ள எண்ணாதீர்கள். தீய குணம் உடையவரின் நட்பை விட்டு ஒழியுங்கள். எல்லாம் உணர்ந்து பிறர் மீது தீய சொல் சொல்வதைத் தடுத்துக் கொள்ளுங்கள். எமன் எப்போதும் வருவான். இது உறுதியானதே. இது வாய்ச்சொல் அல்ல. உலக வழக்கு ஆகும்.
பெருங்குணம் - பெருமைக்குக் காரணமான சாந்தம் முதலிய நற்குணங்கள். ஒருங்கு உணர்ந்து – முற்றுமறிந்து. காமின் - தடுங்கள். காத்தலாவது தன்னிடத்து உண்டாகாது தடுத்தல். திண்ணிது – திண்மை, உறுதியானது. காலன் வரும் - யமன் வருவான்.
No comments:
Post a Comment