15. கற்றோர் பெருமை

“கற்றோர் கனம்அறிவர் கற்றோரே, கற்றறியா

மற்றோர் அறியார், வருத்தமுறப் - பெற்றறியா

வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்

நொந்துஅறிகு வாளோ நுவல்.” — நீதிவெண்பா


துன்பப்பட்டுப் பிள்ளையைப் பெறும் துயரத்தை, பிள்ளை பெறாத மலடி பரிவோடு தெரிந்து கொள்வாளோ? அவள் பிள்ளை பெறும் துன்பத்தை அறிய மாட்டாள். அதுபோல, கற்றறிந்த பெரியவர்களின் பெருமையை, கற்றறிந்த பெரியோரே அறிவர். கற்றறியாத மற்றவரால் அறிந்து கொள்ள முடியாது.

(கனம் - பெருமை.  வந்தி - மலடி.   பரிவு - இரக்கம்.)


15. கற்றோர் பெருமை

“கற்றோர் கனம்அறிவர் கற்றோரே, கற்றறியா மற்றோர் அறியார், வருத்தமுறப் - பெற்றறியா வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம் நொந்துஅறிகு வாளோ நுவல்.” ...