“ஓருபோது யோகியே, ஓண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே என்ப, - திரிபோது
ரோகியே, நான்குபோது உண்பான் உடல்விட்டுப்
போகியே என்று புகல்."
ஒளி உள்ள இளம் தளர்போலும் கைகளை உடைய பெண்ணே! யோகி என்பவன் ஒரு நாளைக்கு ஒருபோது மட்டும் உண்பான். உலக இன்பங்களில் உழல்பவன் ஒரு நாளைக்கு இருவேளை உண்பான். நோயாளி ஒரு நாளில் மூன்று வேளை உண்பான். நான்கு வேளைகள் உண்பவன், உடலை விட்டு விரைவில் இறந்துபோகக் கூடியவனாகத்தான் இருப்பான் என்று சொல்வாயாக.
(யோகி - தவம் செய்பவன். போகி - சிற்றின்பப் பிரியன். திரிபோது - மூன்று வேளை. ரோகி - நோயாளி.)