“ஆன்,அந் தணர்,மகளிர், அன்பாம் குழந்தைவதை;
மானம் தெறும்பிசி வார்த்தை,இவை - மேல்நிரையே
கூறவரு பாவம் குறையாது,ஓவ் வொன்றுக்கும்
நூறுஅதிகம் என்றே நுவல்.” — நீதிவெண்பா
பசுவதை, அறவோர் கொலை, பெண் கொலை, அன்பு காட்ட வேண்டிய குழந்தை கொலை, இழிவைத் தரும் பொய்யுரை ஆகிய இவ் ஐந்து தீமைகளையும் மேல் வரிசையாகச் சொல்ல, அவற்றால் வரும் பாவம் ஒன்றுக்கொன்று குறையாமல் நூறு பங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும்.
(அந்தணர் - அந்தணர் என்போர் அறவோர். வதை - கொலை. மானம் - மதிப்புக் குறைவு. பிசி - பொய்)