“நாவின் நுனியில் நயம்இருக்கின், பூமாதும்
நாவினிய நல்லோரும் நுண்ணுவார்; - நாவின்நுனி
ஆங்கடினம் ஆகில், அத்திருவும் சேராள்,முன்
ஆங்கே வரும்மரணம் ஆம்.” — நீதிவெண்பா
நாக்கின் நுனியில் இனியசொல் இருக்குமானால் மலர்மகளும், இனிய சொல்லை உடைய நல்லோரும் நெருங்கி இருப்பர். அல்லாமல், நாக்கு நுனியானது வன்சொற்கள் பேசி வலிதாகுமானால், மலர்மகளும் சேரமாட்டாள். அதனால் இறப்பும் வரும். (நயம் - இனிய சொல். பூமாது - மலர்மகள், இலக்குமி.)
No comments:
Post a Comment