கடுகம் 2

“தன்குணம் குன்றாத் தகைமையும், தாவில்சீர்

இன்குணத்தார் ஏவின செய்தலும், - நன்குணர்வின்

நான்மறை யாளர் வழிச்செலவும், இம்மூன்றும்

மேன்முறை யாளர் தொழில்.” -- திரிகடுகம்.


தனது குடிப்பிறப்பிற்கு ஏற்ற குணமானது குன்றாமல் விளங்குதற்கு ஏதுவாகிய ஒழுக்கத்தைக் கைக்கொள்ளுதலும், கெடுதல் இல்லாத பெரும் புகழைத் தருகின்ற இனிய குணத்தை உடைய நல்லோர் ஏவிய தொழில்களைச் செய்தலும், அறத்தின் இயல்பை அறியும் அறிவையுடைய நான்கு வகைப்பட்ட வேதங்களை ஓதி, எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் வேதியர் கூறிய வழியில் நடத்தலும், ஆகிய இம் மூன்றும் மேன்மை தங்கிய ஒழுக்கத்தை ஆளுதல் உடையாரது செயல்கள் ஆகும்.


தன்குலச் சிறப்புக் கெடாத வண்ணம் ஒழுகுதலும், குணத்தால் சான்றவர்க்கு ஆவன செய்தலும், நான்மறையாளர் சொல் வழி நிற்றலும் மேலோர் செய்கை. 


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...