“சத்தியத்தை வெல்லாது அசத்தியந்தான், நீள்பொறையை
மெத்திய கோபமது வெல்லாது, - பத்திமிகு
புண்ணியத்தை பாவமது வெல்லாது, போர்அரக்கர்
கண்ணனைத்தான் வெல்லுவரோ காண்.” -- நீதிவெண்பா.
எப்பொழுதும் போர் செய்கின்ற அரக்கர்கள் கண்ணபிரானை வெல்லுவார்களோ? வெல்லமாட்டார்கள். அதுபோல, பொய் மெய்யை வெல்லமாட்டாது. மிகுந்த கோபம் மேலான பொறுமையை வெல்லாது. அன்புமிக்க நல்வினையைத் தீவினை வெல்லாது.
(சத்தியம் - மெய். அசத்தியம் - பொய். மெத்திய – மிகுந்த. பத்தி - அன்பு.)
No comments:
Post a Comment