கடுகம் 26

“ஒல்வது அறியும் விருந்தினனும், ஆருயிரைக்

கொல்வது இடைநீக்கி வாழ்வானும், - வல்லிதில்

சீலம் இனிதுடைய ஆசானும், இம்மூவர்

ஞாலம் எனப்படு வார்.” -- திரிகடுகம்.


தனக்குச் செய்ததைக் கொண்டு மகிழும் விருந்தினனும்; அருமையாகிய உயிரை  ஒருவன் கொல்லும் தொழிலை,  கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே நின்று விலக்கி, வாழ்கின்றவனும்; மனத்தின் உறுதியினால், உயிர்க்கு நன்மையைத் தருவதாகிய ஒழுக்கத்தை  உடைய ஆசிரியனும் ஆகிய இம் மூவரும் உயர்ந்தோர் என்று சொல்லப்படுபவர்.


விருந்தினன் – விருந்து. அது, அறிவிருந்து அறியாவிருந்து என்று இரு வகைப்படும். முன் அறிந்திருந்தமையால் குறித்து வரும் விருந்து அறிவிருந்து. அறிந்திராமையால் குறியாமல் வரும் விருந்து அறியாவிருந்து.  தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்கின்ற விருந்தினரை "ஒல்வது அறியும் விருந்தினன்" என்றார்.


No comments:

064. அமைச்சு - 10. முறைப்படச் சூழ்ந்தும்

  திருக்குறள் பொருட்பால் ஆ. அமைச்சியல் அதிகாரம் 64 -- அமைச்சு இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "செய்யப்படும் தொழில்களை ...