"ஞானம்ஆ சாரம் நயவார் இடைப் புகழும்
ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியில்,
பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர்
மேவுநெறி என்றே விடு."
மேலான அறிவையும் ஒழுக்கத்தையும் விரும்பிக் கடைப்பிடிக்காதவரிடத்திலே, புகழ்ந்து சொல்லப்படும் நான்கு வேதங்களின் அருமைகளைக் கற்று வைத்திருக்கின்ற முறைமையைச் சொல்லுவது என்பது, தீவினை மிக்க பாவிகள் வைத்திருக்கும் மண்பாண்டத்தில், உயர்ந்த கங்கையின் நீரை நிறைத்து வைத்து இருக்கும் முறையைப் போன்றது என்று எண்ணி, அதை விட்டு விடுக.
"மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கை எண்ணுக.
No comments:
Post a Comment