44. இன்னின்னார்க்கு இதுவிது இல்லை

 “உற்றதொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லையாம்,

பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள், - முற்றும்

மவுனத்தோர்க்கு இல்லை வருகலகம், துஞ்சாப்

பவனத்தோர்க்கு இல்லை பயம்.” -- நீதிவெண்பா


தமக்கேற்ற தொழிலைப் பொறுப்போடு செய்துகொண்டு இருப்பவர்களுக்கு உண்டாகின்ற பஞ்சம் எதுவும் இல்லை.  அன்போடு தெய்வத்தை வழிபாடு செய்கின்றவர்களுக்குத் தீவினை இல்லை.  சிறிதும் பேசாமல் மௌனமாக இருப்பவர்களுக்கு வரக்கூடிய கலகம் ஒன்றும் இல்லை. கண் இமைத்தல் இல்லாத தேவர்களுக்கு அச்சமே இல்லை.


(பற்று செபம் - அன்புடைய வழிபாடு.  துஞ்சா - உறங்காத, கண் இமைத்தல் இல்லாத.  பவனத்தோர் - தேவர்.  "இமையாரின் வாழினும் பாடிலரே" --- திருக்குறள்.)


No comments:

44. இன்னின்னார்க்கு இதுவிது இல்லை

 “உற்றதொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லையாம், பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள், - முற்றும் மவுனத்தோர்க்கு இல்லை வருகலகம், துஞ்சாப் பவனத்த...