45. ஆபத்து வரும்போது செல்வமும் தொலையும்

“ஆபத்து வந்தால் அரும்பொருள் தான்வேண்டுமே,

ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால்! - ஆபத்து

வந்தால், அவளும் மருவாமல் எப்பொருளும்

அந்தோ உடன்போம் அறி.” -- நீதிவெண்பா


    ஒருவனுக்கு ஆபத்துக் காலம் வந்தால் அதனை நீக்க அருமையான செல்வம் வேண்டப்படும்.  திருமகள் உடன் இருப்பாளானால் ஆபத்து இல்லை. அந்த இக்கட்டான காலம் ஏன் வருகிறது எனின், இடுக்கண் நேரிட்டால் அத் திருமகளும் சேராமல், ஐயோ, எல்லாப் பொருள்களும் நில்லாது அவளோடு போய்விடும்.  இதனை நீ புரிந்துகொள்.


    (பூமாது - இலக்குமி.  மருவாமல் - சேராமல்.)


No comments:

057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...