மூலம் 9

“கொன்றுஉண்பான் நாச்சாம், கொடுங்கரிப் போவான் நாச்சாம்,

நன்றுஉணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம், - ஒன்றானுங்

கண்டுழி நாச்சாம், கடவான் குடிப்பிறந்தான்

உண்டுழி நாச்சாம் உணர்ந்து.” -- சிறுபஞ்சமூலம்.


ஓருயிரைக் கொன்று அதன் தசையைத் தின்பவனுடைய நாக்கானது அற்று விழும். பொய்ச்சாட்சி கூறப்போகின்றவனுடைய நாக்கானது அற்று விழும். நன்றாகக் கற்று அறிந்தவர்களுக்கு எதிரில், கற்று உணராதவனுடைய நாக்கானது வர்கள் வினாவுக்கு விடை கூறமுடியாமல் அடங்கிப் போகும். தான் சொல்லிய சொல்லைக் கடவாத நெறியில் நடப்போன்,  கடன் தண்ட வேண்டி வந்தானொருவனைப் பார்த்த இடத்து, தான் வாக்குச் சொன்னவனிடம் பேசுவதற்கு நாக்கு எழாது. உயர்குடியில் பிறந்தவன், தான் யாதானும் ஒருவனிடத்து ஒரு நன்மையைப் பெற்றுப் பின் அவன் குற்றஞ் செய்ததாக அறிந்தபொழுது, அதனை உணர்ந்து, தன் நாவால் அதனைப் பிறர்க்குச் சொல்லான்.


No comments:

058. கண்ணோட்டம் - 04. உளபோல் முகத்து

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 58 -- கண்ணோட்டம் இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தகுந்த அளவில் கண்ணோட்டம்...