60. கொடுப்போரை வருத்தாதே

“ஆயும் மலர்த் தேன்வண்டு அருந்துவது போல் இரப்போர்

ஈயும் அவர் வருந்தாது ஏற்றல் அறம்; - தூயஇளம்

பச்சிலையைக் கீடம் அறப் பற்றி அரிப்பதுபோல்

அச்சம் உற வாங்கல் அகம்.” -- நீதிவெண்பா.


தான் ஆராய்ந்து கண்ட பூவில் உள்ள தேனை, வண்டு உண்பது போல, பிச்சை எடுப்போர், தனக்குக் கொடுப்பவர்களை வருத்தாதபடி, அவர் குறிப்பு அறிந்து பெற்றுக் கொள்ளுதல் அறம் ஆகும். புழுவானது தூய்மையான இளந்தளிரைப் பற்றி நின்று, அதனை இடையில்லாமல் அரித்து விடுவது போல, கொடுப்பவர்கள் அஞ்சும்படி வாங்குதல் தீமையாகும்.


(இரப்போர் - பிச்சை எடுப்போர்.  கீடம் - புழு.  அகம் - திமிர், முனைப்பு.)


No comments:

பொது --- 1133. ஆராத காதலாகி

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஆராத காதலாகி (பொது) முருகா!  பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி உழலாமல்,  தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரி...