கடுகம் 11

 “விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்

களியாதான் காவாது உரையும், - தெளியாதான்

கூரையுள் பல்காலும் சேறலும், இம்மூன்றும்

ஊரெல்லாம் நோவது உடைத்து.” -- திரிகடுகம்.


தன்னை அழையாதவன் ஆடுகின்ற கூத்தாட்டத்தைச் சென்று பார்ப்பதும், தளர்ந்து விழும்படி மதுவுண்டு களிக்காதவனாய் இருந்தும், கள்ளுண்டவன் போல் வழுப்படப் பேசுதலும், தன்னை நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறையும் செல்லுதலும், ஆகிய இம் மூன்றும், ஊரிலுள்ளோர் எல்லாரும் துன்பப்படும் குற்றத்தை  உடையன ஆகும். 


No comments:

மூலம் 18

 “பொய்யாமை பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார் வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை, ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல் பேர்த்துஉ...