“ஓதுபொருள் கண்டோர்க்கு உறும்ஆசை, நீதியிலாப்
பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாம், - சீதமலர்
கண்டோர்க்கு உறும்வாசம், கற்றுஅமைந்த நற்றவரைத்
கண்டோர்க்கு உடன் ஆம் கதி.” -- நீதிவெண்பா.
யாவராலும் சொல்லப்படுகின்ற செல்வத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் ஆசை மிகுதியாகும். நேர்மை இல்லாத தீயவரைக் கண்டவர்களுக்குத் தீமை உண்டாகும். குளிர்ச்சியான மலர்களைப் பார்த்தவர்களுக்கு மணம் உண்டாகும். கற்று அடங்கிய பெரியோர்களைக் கண்டவர்களுக்கு நல்ல கதி உடனே உண்டாகும்.
(பாதகர் - தீயோர். கற்று அமைந்த – கற்று அடங்கிய. கதி - நல்லநிலை.)
No comments:
Post a Comment