63. தீயோர் செல்வம் நல்லோர்க்கு ஆகாது

“பாவிதனம் தண்டிப்போர் பால்ஆகும் அல்லது, அருள்

மேவுசிவன் அன்பர்பால் மேவாதே, - ஓவியமே!

நாயின்பால் அத்தனையும் நாய்தனக்குஆம், அன்றியே

தூயவருக்கு ஆகுமோ சொல்.” -- நீதிவெண்பா


சித்திரம் போன்று அழகிய பெண்ணே! நாயினுடைய பால் அவ்வளவும் நாய்க்கே ஆகுமல்லது, தூய்மையான மக்களுக்குப் பயன் ஆகுமோ? நீ சொல். (ஆகாது) அதுபோல, தீயவர்களின் செல்வம் தண்டித்து வாங்கும் தீயவர்களிடத்திலே சேருமே அல்லாமல், அருள் பொருந்திய சிவனடியார்களிடத்துச் சேராது.


(தனம் - செல்வம்.  மேவாது - சேராது, பொருந்தாது.)


No comments:

மூலம் 12

“கோறலும் நஞ்சு, ஊனைத் துய்த்தல் கொடுநஞ்சு, வேறலும் நஞ்சு, மாறு அல்லானை, - தேறினான் நீடாங்கு செயதலும் நஞ்சுஆம், இளங்கிளையை நாடாதே தீதுரையும் ...