கடுகம் 9

“பெருமை உடையார் இனத்தின் அகறல்,

உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,

விழுமிய அல்ல துணிதல், இம் மூன்றும்

முழுமக்கள் காதல் அவை.” -- திரிகடுகம்.


பெருமைக்கு உரியவர் இனத்தில் இருந்து நீங்கி வாழ்தலும், தமக்கு உரியர் அல்லாத மாதரை விரும்பி அவரோடு வாழ்தலும், சிறந்தவை அல்லாத செயல்களைச் சிறந்தவையாகத் துணிந்து செய்தலும், ஆகிய இம் மூன்றும் அறிவற்ற மூடர்கள் செயல்கள் ஆம். (முழுமக்கள் என்றது மங்கல வழக்கு என்றும் கொள்ளலாம். இதற்கு அறிவில்லாத மூடன் என்பதே பொருள். “முழுமகன் சிதடன், இழுதை, மூடன்” என்பது திவாகரம்)


No comments:

பொது --- 1133. ஆராத காதலாகி

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஆராத காதலாகி (பொது) முருகா!  பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி உழலாமல்,  தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரி...