கடுகம் 7

“வாளைமீன் உள்ளல் தலைப்படலும், ஆளல்லான்

செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்லவையுள்

அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்

துஞ்சு ஊமன் கண்ட கனா.” -- திரிகடுகம்.


வாய்பேசாத ஊமையன் தான் கண்ட கனவைப் பிறருக்கு எடுத்துரைத்துப் பயன்படுத்த கூடாதவன் ஆவான். உள்ளான் வாளை மீனைத் தாக்குதலும், திறமை இல்லாதவன் செல்வக் குடியில் பிறந்து அதனைக் காப்பாற்றுதலும், சபைக்கு அஞ்சுகின்றவன் படித்த படிப்பும் ஆகிய இம் மூன்றும் தூங்குகின்ற கண்ட கனவினைப் போலப் பயன்படாதவை ஆகும்.


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...