59. கொடுப்பதைத் தடுப்பது

 “தாமும் கொடார், கொடுப்போர் தமையும் ஈயாதவகை

சேமம் செய்வாரும் சிலர் உண்டே; - ஏமநிழல்

இட்டுமலர் காய்கனிகள் ஈந்து உதவும் நன்மரத்தைக்

கட்டுமுடை முள்எனவே காண்.” -- நீதிவெண்பா.


தாங்களும் ஒருவர்க்கும் ஒன்றும் கொடுக்காமல், கொடுக்கக் கூடிய நல்லவர்களையும் இனிய நிழலைக் கொடுத்துப் பூவும் காயும் பழமும் தந்து உதவக் கூடிய நல்ல மரத்தைச் சுற்றிக் கொண்டுள்ள உடை வேலமுள்ளைப் போல, கொடுக்காதவாறு தடுத்துக் காவல் செய்பவரும் உலகில் சிலர் உள்ளனர்.


(சேமம் - பாதுகாவல்.  ஏமம் நிழல் - இனிய நிழல்.  உடைமுள் - கருவேலமுள்.)


No comments:

மூலம் 18

 “பொய்யாமை பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார் வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை, ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல் பேர்த்துஉ...