58. இறைவன் திருவருள்

“சிவனே சிவனே சிவனே என்பார் பின்

சிவன் உமையாளொடும் திரிவன், - சிவன்அருளால்,

பெற்றஇளங் கன்றைப் பிரியாமல் பின் ஓடிச்

சுற்றுபசுப் போல் தொடர்ந்து.” -- நீதிவெண்பா.


சிவபெருமான் திருவருளினால், சிவனே சிவனே சிவனே என்று அலறுபவர்களின் பின்னே, தான் ஈன்ற இளம் கன்றைப் பிரியாமல் அதன் பின்னே ஓடி அதனைச் சுற்றித் திரிகின்ற பசுவினைப் போல், இடைவிடாமல் சிவபெருமான் அருள் உருவாகிய உமாதேவியோடும் கூடவே திரிந்து கொண்டு இருப்பன்.


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...