கடுகம் 15

“பொய்வழங்கி வாழும் பொறியறையும், கைதிரிந்து

தாழ்விடத்து நேர்கருதும் தட்டையும், - ஊழினால்

ஓட்டி வினைநலம் பார்ப்பானும், இம்மூவர்

நட்கப் படாஅ தவர்.” -- திரிகடுகம்.  


பொய்ச் சொற்களைப் பேசி, அதனால் உயிர் வாழ்கின்ற திரு இல்லாதவனும், தனக்கு மேம்பட்டவன் ஏதாவது காரணத்தால் தாழ்வடைந்த காலத்தும் அவனைத் தனக்கு மேலானவனாகவே கருதாத குற்றம் உள்ள மனத்தவனும், நட்புக் கொண்டவனிடம் இருந்து தனக்கு என்ன பயன் உண்டாகும் என்று எதிர்பார்க்கின்றவனும், ஆகிய இம் மூன்று திறத்தாரும் யாவராலும் நட்புக் கொள்ளத் தகாதவர் ஆவர்.


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...