66. இன்னின்னார்க்கு அழகு இது

 “அன்னம் அனையாய் குயிலுக்கு ஆனஅழகு இன்னிசையே,

கன்னல் மொழியார்க்கு கற்பாமே, - மன்னுகலை

கற்றோர்க்கு அழகு கருணையே, ஆசைமயக்கு

அற்றோர்க்கு அழகு பொறையாம்.”  -- நீதிவெண்பா


அன்னப் பறவை போன்றவளே! குயிலுக்கு உள்ள அழகு இனிய இசையே. கரும்புபோல் இனிக்கும் மொழியை உடைய பெண்களுக்கு அழகு கற்பே ஆகும். நிலைத்த கல்வியைக் கற்றவர்களுக்கு அழகு இரக்கமே ஆகும். பேராசை மயக்கத்தை விட்டவர்களுக்கு அழகு பொறுமையே ஆகும்.


(கன்னல் - கரும்பு.  மன்னுகலை - நிலைத்த கல்வி.  கருணை - இரக்கம்.)


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...