32. உருவு கண்டு ஏமாறுதல் கூடாது

“கற்பூரம் போலக் கடல்உப்பு இருந்தாலும்,

கற்பூரம் ஆமோ கடல்உப்பு? - பொற்புஊரும்

புண்ணியரைப் போல இருந்தாலும், புல்லியர்தாம்

புண்ணியர் ஆவாரோ? புகல்.” — நீதிவெண்பா


கடல் நீரில் தோன்றும் உப்பானது, உருவத்தால் கற்பூரம் போல வெண்மையாக இருந்தாலும், அது உண்மையில் கற்பூரம் ஆகுமா? ஆகாது.  அதுபோல, தீவினையாளர்கள், கோலத்தால் அழகு மிகுந்த நல்வினையாளர்களைப் போலக் காட்சி தந்தாலும், தன்மையில் அவர்கள் நல்வினையாளர்கள் ஆகமாட்டார்.


(பொற்பு - அழகு.  புல்லியர் - தீவினையாளர்.)


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...