26. தீயவரை நல்லார் அணுகார்

“குணம் நன்கு உணராக் கொடியோர் இடத்தில்

குணம் நன்கு உடையார் குறுகார்; - குணம்உடைமை

நண்ணாச் சமண நகரத்தில் தூசுஒலிக்கும்

வண்ணானுக்கு உண்டோ வழக்கு.” — நீதிவெண்பா


ஆடையை அணியும் இயல்பு இல்லாத சமண மதத்தினர் இருக்கும் இடத்தில், அழுக்கு ஆடைகளை வெளுக்கும் தொழில் செய்யும் வண்ணானுக்கு வேலை இல்லை. அதுபோல, நல்லியல்பு இல்லாத தீயோரிடத்தில், நல்ல இயல்புகளை உடைய பெரியோருக்கு வேலை இல்லை. 

(தூசு - ஆடை.  ஒலித்தல் - மாசு நீக்கி வெளுக்கச் செய்தல். ஆடை உடுத்தாத சமணர், திகம்பரர் எனப்படுவர், வெள்ளை ஆடை உடுத்துகின்ற சமணர் சுவேதாம்பரர் எனப்படுவர்) 


No comments:

055. செங்கோன்மை - 04. குடிதழீஇக் கோலோச்சும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில்,   "குடிமக்களின் கருத்த...