27. சேர்ந்த இடத்தினால் சிறப்பு

“ஆனை மருப்பும், அருங்கவரி மான்மயிரும்,

கான வரிஉகிரும், கற்றோரும், - மானே!

பிறந்தஇடத்து அன்றிப் பிறிதொரு தேசத்தே

செறிந்தஇடத்து அன்றோ சிறப்பு.”

பெண்ணே! யானையின் கொம்பும், அருமையான கவரிமானின் மயிரும், காட்டில் வாழும் புலியின் நகமும், கற்றவர்களும் தாம் தோன்றிய இடத்தில் அல்லாமல், தாம் சேர்ந்த இடங்களிலேயே சிறப்புப் பெறுவர்.


(மருப்பு - தந்தம். கானவரி - காட்டில் வாழும் புலி.  உகிர் - நகம்.)


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...