பொய் சொல்லக் கூடாது

 

                                                 பொய் சொல்லுதல் பாவம். 

                                                               -----

பொய்யருக்குப் பொய் உரைத்தால் வெற்றி ஆம்;

     அவருக்குப் பொய் ஆகாத

மெய்யருக்குப்  பொய் உரைத்தால், தேய்பிறை போல்

     தவம் குறையும், மிடி உண்டாகும்;

துய்ய தாய் தந்தையர்க்குப் பொய் உரைத்தால்,

     வறுமை பிணி தொலையா; என்றும்

உய்ய அருள் தேசிகற்குப் பொய் உரைத்தால்,

     நரகமது உண்மை தானே.

 

அந்தகக் கவி வீரராகவர் பாடிய இப் பாடலின் பொருள்......

 

🌻பொய்யே சொல்பவரிடத்தில் பொய் சொன்னால் வெற்றி உண்டாகும்.

 

🌻பொய்யை விரும்பாத மெய்யரிடம் பொய் சொன்னால், பிறைச் சந்திரன் தேய்வது போல புண்ணியப் பயன் தேய்ந்து போகும்.  அதுவும் அல்லாமல் வறுமையும் உண்டாகும்.

 

🌻தூய அன்பு உடைய தாய்தந்தையரிடம் பொய் சொன்னால், வறுமையும் நோயும் எப்போதும் நீங்கா.

 

🕉உய்வதற்கு எப்போதும் நல்ல வழியைக் காட்டும் குருநாதரிடம் பொய் சொன்னால், நரகம் கிட்டும்.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...