அம்மா! பிடிவாதம் செய்யாதே.

 

 

மட்டார் குழல் அங்கயற்கண் அம்மே! இம் மட்டு என்று தொகைக்கு

எட்டாத எனது துயரம் நின்பால் சொல்லியே சலிக்க,

ஒட்டாரம் நீ செய்யல் ஆகாது, பார், உன் அடிமைதன்னை

நட்டாற்றில் கைவிட்டிடாதே, பழி வெகுநாள் நிற்குமே.

 

பலபட்டடை சொக்கநாதப் புலவர் பாடிய இப் பாடலின் பொருள்......

 

தேன் பொருந்திய மலர்களைச் சூடியுள்ள அங்கயற்கண்ணித் தாயே! இவ்வளவு அவ்வளவு என்று எண்ணில் அடங்காத எனது துயரங்களை உன்னிடத்தில் நான் சொல்லிச் சலித்து விட்டது. நீ பிடிவாதம் செய்தல் ஆகாது. உன் அடியவனான என்னை, வெள்ளம் நிறைந்த ஆற்றைக் கடக்காதவாறு நடுவில் கைவிடுவது போல், துன்பவெள்ளத்தில் என்னைத் தவிக்க விடாதே. விட்டாயானால் பழியானது உனக்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கும். 

 

மட்டார் = மட்டு +ஆர் = தேன் நிறைந்த.

 

ஒட்டாரம் -- பிடிவாதம்.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...