“கற்புஉடைய பெண்அமிர்து, கற்றுஅடங்கி னான்அமிர்து,
நற்புடைய நாடுஅமிர்து,அந் நாட்டுக்கு - நற்புடைய
மோகமே சேர்கொடி வேந்துஅமிர்து, சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து.” -- சிறுபஞ்சமூலம்
கற்புள்ள பெண்ணானவள் தன் கணவனுக்கு அமிர்தம் போல்பவள். அறிவு நூல்களைக் கற்று, அவற்றின் வழியில் அடங்கி நிற்பவன் உலகத்தார்க்கு அமிர்தம் போன்றவன். நன்மையுள்ள நாடு அந்நாட்டரசனுக்கு அமிர்தம் போன்றது. அந்த நாட்டுக்கு நன்மையைச் செய்கின்ற மேகத்தை அளாவுகின்ற கொடியை உடைய அரசன் அமிர்தம் போல் இன்பம் செய்வான். அவ்வேந்தனது சேவகனும், வேந்தனுக்கு நன்மையானவற்றையே செய்வானாயின், அவன் அவ்வேந்தனுக்கு அமிர்தம் போல்வான்.
No comments:
Post a Comment