மூலம் 20

“கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரை

நள்ளான், உயிர் இரங்க நாவாடான், நள்ளானாய்

ஊன்மறுத்துக் கொள்ளானேல், ஊனுடம்பு எஞ்ஞான்றும்

தான் மறுத்துக் கொள்ளான் தளர்ந்து.* -- சிறுபஞ்சமூலம்.


பிறர்பொருளைக் களவு செய்யாதவனாய், சூதாட்டத்தில் என்றும் எக்காலத்தும் கலவாதவனாய், கீழ்மக்களை நட்புக் கொள்ளாதவனாய், பிற உயிர்கள் வருந்தும்படி சொல் கூறாதவனாய், ஊன் உணவை மறுத்து, ஒருவன் கொள்ளாது இருப்பானாயின், அவன்தான் மீட்டும் பிறக்கமாட்டான்.


No comments:

062. ஆள்வினை உடைமை - 05. இன்பம் விழையான்

 திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தனக்கு இன்பத்தை விரும...