“தீயவர்பால் கல்வி சிறந்தாலும், மற்று அவரைத்
துயவர் என்று எண்ணியே துன்னற்க; - சேயிழையே!
தண்ஒளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும்
நண்ணுவரோ மற்றதனை நாடி.” -- நீதிவெண்பா.
நல்ல அணிகளை அணிந்த பெண்ணே! பாம்பானது குளிர்ந்த ஒளி பொருந்திய மாணிக்க மணியைத் தன்னிடத்தில் கொண்டு இருந்தாலும், அந்த மாணிக்கத்தை விரும்பி அப் பாம்பினிடத்து யாரேனும் நெருங்குவார்களோ? ஒருகாலும் நெருங்கார். அதுபோல, கெட்ட இயல்பு உள்ளவர்களிடத்தில் கல்வி நிறைந்து இருந்தாலும், அவரைப் பெரியவர்கள் என்று எண்ணிச் சேராது இருப்பாயாக.
(துன்னற்க – நெருங்காது ஒழிக. இழை - அணி.)
No comments:
Post a Comment