39. காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு

ஓதரிய வித்தைவந்தால் உரியசபைக்

     கழகாகும்; உலகில் யார்க்கும்

ஈதலுடன் அறிவுவந்தால் இனியகுணங்

     களுக்கழகாய் இருக்கும் அன்றோ?

நீதிபெறு தண்டலையார் திருநீறு

     மெய்க்கழகாய் நிறைந்து தோன்றும்;

காதிலணி கடுக்கனிட்டால் முகத்தினுக்கே

     அழகாகிக் காணுந் தானே.”


இதன் பொருள்


காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே அழகு ஆகிக் காணும் - காதில் அழகிய கடுக்கனை அணிந்தால், முகத்திற்கு அழகிய காட்சி தரும், (அவ்வாறே) ஓத அரிய வித்தை வந்தால் உரிய சபைக்கு அழகு ஆகும் - புகழ்ந்து மாளாத  கல்வி அறிவு ஒருவனுக்குக் கிடைக்குமானால், (கல்விக்குத்) தக்க அவையில் இருக்க அழகாய் இருக்கும்; உலகில்  யார்க்கும் ஈதலுடன் அறிவு வந்தால் இனிய குணங்களுக்கு அழகாய் இருக்கும் அன்றோ - உலகினில் எவருக்கும் கொடைப் பண்புடன் அறிவும் கூடினால் (மற்ற) இனிய பண்புகளுக்கு அழகு விளங்கும் அல்லவா?, நீதி பெறு தண்டலையார் திருநீறு மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும் - அறம் நிறைந்த, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருநீறு, அதனை அணிந்த உடம்புக்கு முற்றிலும் அழகாகக் காணப்படும்.


      கவினைத் தருவது நீறு’, ‘பூச இனியது நீறு,’ ‘பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு’, ‘அருத்தம் அது ஆவது நீறு, அஙவலம் அறுப்பது நீறுஎன்று திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகத்தை ஓதி உணர்க. அத்துடன், வள்ளல் பெருமான் அருளி உள்ள திருநீற்றுத் திருப்பதிகங்களையும் ஓதி உணர்தல் நலம். ’காதுக்குக் கடுக்கன், முகத்துக்கு அழகு' என்பது பழமொழி.


No comments:

20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே ந...