59. சிறியோர் பெரியோர் ஆகார்

 


சி”றியவராம் முழுமூடர் துரைத்தனமாய்

     உலகாளத் திறம்பெற் றாலும்,

அறிவுடையார் தங்களைப்போற் சற்குணமும்

     உடையோர்கள் ஆக மாட்டார்;

மறிதருமான் மழுவேந்தும் தண்டலையா

     ரே! சொன்னேன், வாரி வாரிக்

குறுணிமைதான் இட்டாலும் குறிவடிவம்

     கண்ணாகிக் குணம்கொ டாதே!


இதன்பொருள் ---


மறிதரும் மான் மழு ஏந்தும் தண்டலையாரே - மறித்து நோக்கும் மானையும் மழுவையும் ஏந்தியவரே? திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளே! 


வாரிவாரிக் குறுணி மைதான் இட்டாலும் குறிவடிவம் கண் ஆகிக் குணம் கொடாதே – குறுணி அளவு மையை வாரிவாரித் தடவினாலும் கண்போன்று எழுதிய ஓவியம், உண்மையில் கண் ஆகி நலம் தராது, (அதுபோல),சிறியவராம் முழுமூடர் துரைத்தனமாய் உலகு ஆளத் திறம் பெற்றாலும் - அற்பராகிய முழுமூடர்கள் அரசியலில் கலந்து நாட்டை ஆளும் திறத்தை அடைந்தாலும், அறிவுடையார் தங்களைப்போல் சற்குணமும் உடையோர்கள் ஆகமாட்டார் - அறிவுடையவரைப் போல நற்பண்பு உடையவர்களாக மாட்டார்கள்.


59. சிறியோர் பெரியோர் ஆகார்

  சி”றியவராம் முழுமூடர் துரைத்தனமாய்      உலகாளத் திறம்பெற் றாலும், அறிவுடையார் தங்களைப்போற் சற்குணமும்      உடையோர்கள் ஆக மாட்டார்; மறிதரும...