7. இளமையில் கல்வி

“வருந்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம்,

வருந்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்

வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாம்திரிந்து

தாழும்அவர் தம்அடிக்கீழ்த் தான்


தன்னை மக்கள் வளைத்து வருத்தப்படுத்த வளைந்து கொடுத்த மூங்கில் கொம்பு, பெருமை வாய்ந்த அரசரின் தலைமுடியின்மேல் பல்லக்கு ஆகச் சிறப்புப் பெறும்.  வளையாத மூங்கில் கம்பானது, தாழ்வுபெற்று கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு அவருடைய காலின்கீழ் கிடந்து உலகமெல்லாம் அலைந்து இழிவுபடும்.

(கருத்து — இளமையில் பெற்றோரும் ஆசிரியரும் வற்புறுத்திக் கல்வி கற்க வைக்க,   பெற்றோரும் ஆசிரியரும் காட்டிய வழியில் வருந்திக் கல்வியறிவைப் பெற்ற பிள்ளைகள், பிற்காலத்தில் பெரியோர் பலரும் பாராட்டும்படி சிறப்பைப் பெறுவார்கள்.  இளமையில் உடம்பை வருத்தி, கல்வியறிவைப் பெற எண்ணாமல் சோம்பியிருந்து ஊர் சுற்றிய பிள்ளையானவன், பிழைக்க வழியில்லாமல், ஊர்தோறும் திரிந்து, கீழ்மக்களிடத்திலே அவர்களை இட்ட வேலைகளைச் செய்து சிறுமைப்பட்டுக் கிடப்பார்கள்.)

(வேழம்பர் - கழைக்கூத்தாடிகள்.  வேய் - மூங்கில்.  மேதினி - உலகம்.)


No comments:

20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே ந...