5. அன்பினால் நன்மை

“பகைசேரும் எண்ணான்கு பல்கொண்டே, நல்நா

வகைசேர் சுவைஅருந்து மாபோல், - தொகைசேர்

பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்

சுகம்உறுதல் நல்லோர் தொழில்.” — நீதிவெண்பா


நல்ல நாக்கானது தன்னோடு இருந்துகொண்டே தனக்கு கேடு விளைவிக்கும் முப்பத்திரண்டு பற்களைக் கொண்டே சுவை வகைகளை அனுபவிப்பது போல, பகைவர் பலர் இருந்தாலும், அவர்களிடம் உண்மை அன்பைக் காட்டி, அவர்களின் மூலம் நன்மையை அடைதல் நல்லோர் செயலாகும்.




No comments:

20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே ந...