“காந்தன் இல்லாத கனங்குழலாள் பொற்புஅவமாம்,
சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம், - ஏந்திழையே
அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம், அவமே
துன்எயிறுஇல் லார்ஊண் சுவை.” — நீதிவெண்பா
மணிகளால் இழைக்கப்பட்ட அணிகளை அணிந்தவளே! கணவன் இல்லாத கனத்த கூந்தலை உடைய பெண்ணின் அழகு வீண். பொறுமை என்பது இல்லாதவரின் தவம் வீண் ஆகும். தாயில்லாத பிள்ளை இருப்பது வீணே. நெருங்கிய பற்கள் இல்லாதவர்கள் உண்ணும் உணவின் சுவையும் வீணே.