“மென்மதுர வாக்கால் விரும்பும் சகம், கடின
வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம், - நன்மொழியை
ஓதுகுயில் ஏதுஅங்கு உதவியது? கர்த்தபந்தான்
ஏதுஅபரா தம்செய்தது, இன்று.” — நீதிவெண்பா
இனிமையான குரல் உள்ள குயிலானது எதைக் கொடுத்தது? யாரும் விரும்பாத கத்தலை உடைய கழுதை எதைக் கெடுத்தது? ஓசை நயத்தால்தான் குயிலை விரும்புவர்கள் கழுதையை வெறுக்கிறார்கள். அதுபோல, மென்மையான இன்மொழியைக் கேட்டே மகிழும் உலகத்தவர்தான் கடுமையான வன்சொல்லைக் கேட்டு வெறுக்கிறார்கள். (மதுரம் - இனிமை. சகம் - உலகத்தினர். கர்த்தபம் - கழுதை. அபராதம் - கெடுதி.)