நுண்ணர்வு இன்மையே வறுமை

      

நுண்ணறிவு இல்லாமையே வறுமை

-----

 

     பொருட்செல்வம் இல்லையானால்அது வறுமை என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் வறுமை என்பதுஒருவனுக்கு அறிவுநூல்களைக் கற்றுஅறிந்துநுண்ணிய அறிவு இல்லாமையே ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     திருக்குறளில்தவம் என்னும் ஓர் அதிகாரம். மனத்தை ஐம்பொறிகளின் வழியே போக ஒட்டாமல்நிலைநிறுத்திக் கொள்ளும் வண்ணம்பல விரதங்களை மேற்கொண்டுஉணவைச் சுருக்கிக் கொள்ளுதலும்,கோடைக் காலத்தில் காய்கின்ற வெயிலில் நிற்றலும்மழைக் காலத்தில்மழையிலும்பனிக்காலத்தில் பனியிலும் இருத்தலும்நீர் நிலைகளில் நிற்றலும் ஆகிய நல்ல செயல்களைக் கடைப்பிடித்துஅச் செயல்களால் தம்முடைய உயிருக்கு வரும் துன்பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டுபிற உயிர்கள்பால் அருள் உடையர் ஆதல் தவம் ஆகும். 

 

     சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை உள்ள வெயில் காலத்தில்வெயில்படும் இடத்தில் நின்றுகொண்டு இருத்தல். வெயில் நிலை நிற்றல் என்றதனால்நாற்புறமும் தீயானது சூழ,மேலே சூரியனின் கதிர்கள் படுவதான பஞ்சாக்கினி மத்தியில் இருத்தல் என்பதும் கொள்ள வேண்டும்.

 

     ஆவணி மாதம் முதல்கார்த்திகை மாதம் வரை உள்ள மழைக் காலத்திலும்மார்கழி மாதத்துப் பனியிலும் ஏரிமடுஆறு போன்ற நீர்நிலைகளில் நின்றுகொண்டு இருத்தல்.

 

     இவை அல்லாமல்ஈரத் துணியைப் போர்த்திக் கொண்டு இருத்தல்பட்ச உபவாசம்மாத உபவாசம் இருத்தல்,மரத்தின் கீழ் வசித்தல் ஆகியவை தவநிலையில் அடங்கும்.

 

     இவையாவும்மனதைச் செம்மைப்படுத்துவதற்காகவும்ஒருநிலைப் படுத்துவதற்காகவும் அமைந்தவை. "மனம் அது செம்மையானால்மந்திரம் செபிக்க வேண்டாம்" மந்திரத்தை செபிப்பதேமனத்தைச் செம்மைப்படுத்துவதற்குத் தான்.

 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா;

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா;

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா;

மனமது செம்மையானால் மந்திரம் செம்மைமே.

 

என்பது "அகத்தியர் ஞானம்" என்னும் நூலில் வரும் பாடல்.

 

     "உணவைச் சுருக்குதல் முதலியவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும்பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவத்திற்கு வடிவம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     மற்ற விரதங்கள் எல்லாம்உற்ற நோய் நோன்றல்உயிர்க்கு உறுகண் செய்யாமை என்னும் என்னும் இந்த இரண்டிலே அடங்குவதால்இதுவே தவத்திற்கு இலக்கணம் ஆக நாயனாரால் சொல்லப்பட்டது.

 

உற்றநோய் நோன்றல்உயிர்க்கு உறுகண் செய்யாமை,

அற்றே தவத்திற்கு உரு.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமையே தவம் என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்தை ஏற்றுக் கொள்ளுகின்றதுபதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "சிறுபஞ்சமூலம்"

 

உயிர்நோய் செய்யாமைஉறுநோய் மறத்தல்,

செயிர்நோய் பிறர்கண் செய்யாமை செயிர்நோய்

விழைவு வெகுளியினை விடுவான் ஆயின்

இழிவு அன்று இனிது தவம்.  --- சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் ---

 

     உயிர் நோய் செய்யாமை --- பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்யாமையும்,உறு நோய் மறத்தல் --- தனக்குப் பிறரால் வருந் துன்பத்தை மறத்தலும்செயிர்நோய் பிறர்கண் செய்யாமை --- கோபத்தால் உண்டாகும் துன்பத்தைப் பிறரிடத்துச் செய்யாமையும்செயிர்நோய் விழைவு வெகுளி ஆகிய இவை விடுவான் ஆயின் --- குற்றத்தைச் செய்யுந் துன்பத்தைத் தருகின்றஅவாவும்கோபமும்ஆகிய இவற்றைவிட்டுவிடுவானே யானால்,  தவம் இழிவு அன்று இனிது --- அவனால் செய்யப்படும் தவமானதுதாழந்ததன்றுஇனிமையுடையதாகும்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில்,  "உலகத்தில் செல்வர் சிலராகவும்வறுமை உடையோர் பலராகவும் இருபத்தற்குக் காரணம் யாது என்றால்தவம் செய்வார் சிலராகவும்,செய்யாதார் பலராகவும் இருப்பதே" என்கின்றார் நாயனார்.

 

     செல்வம் என்பது நுண்ணறிவு உடைமையையும்வறுமை என்பது நுண்ணறிவு இல்லாமையையும் குறித்து நின்றது. இல்லாதவர் என்றால்செல்வம் இல்லாதவர் என்று பொருள் கொள்ளுதல் கூடாது.

 

"இலர்பலர் ஆகிய காரணம்நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்".

 

என்று நாயனார் அருளிய திருக்குறளுக்கு,விளக்கமாக அமைந்துள்ளவை பின்வரும் பாடல்கள்.

 

நுண்ணுணர்வு இன்மை வறுமைஅஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; -எண்ணுங்கால்

பெண்ணவாய் ஆண்இழந்த பேடி அணியாளோ,

கண்ணவாத் தக்க கலம்.                    ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஒருவனுக்கு நுட்பமான அறிவில்லாமையே வறுமை ஆகும். நுட்ப அறிவினை உடையவனாய் இருத்தலே அவனுக்கு மிகப் பெருகிய பெருஞ் செல்வமாகும்என்னதான்அணிமணிகளால் தன்னை அழகு செய்துகொண்டாலும்பேடி பெண்ணாக முடியாது. அதுபோலத் தான்,மனிதர்க்கு அழகு கற்று அறிந்து ஒழுகிநுண்ணுணர்வு பெற்று இருத்தல்.

 

நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்

உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்ப்

புணர்தல் நிரயத்துள் ஒன்று.           --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நுண்ணிய அறிவு உடையவரோடு கலந்து பழகி இன்புறுதல்விண்ணுலக வாழ்வைப் போன்றதொரு இன்பத்தைத் தருவதாகும். நல்ல பல நூல்களைக் கற்று அறிந்துநுண்ணறிவு இல்லாததனக்கும் பிறர்க்கும் நன்மை பயக்குமாறு இல்லாமல் வாழும் கீழோருடன் நட்புக் கொண்டு இருப்பது நரகத்தில் இருந்து துன்பத்தை அனுபவிப்பது போன்றது.

 

     "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று நாயனார் அறிவுறுத்தியபடிபொருட்செல்வமானது கீழ்மக்களிடத்தும் நிறைந்திருக்கக் காணலாம். எனவேபொருட்செல்வத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல்செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் ஒருவனுக்கு அருட்செல்வமே என்று காட்ட "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்" என்று அருளினார் நாயனார். அறிவு இருந்தால்தவம் செய்து இறைவன் அருளைப் பெறலாம். பொருள் இருந்தால்அறிவு மயக்கமே உண்டாகும். அறிவு மயக்கம் என்பதுதான் செருக்கு. நுண்ணறிவு உடையவனிடத்தில் செல்வம் இருந்தால்தானும் துய்த்துஇல்லாத பிறருக்கும் ஈந்து,செல்வத்தினால் ஆன பயனை,இறையருளாக மாற்றிக் கொள்வான். 

 

     பொருளை அருளாக மாற்றிக் கொள்ளும் அறிவு ஒருவனுக்கு இல்லையானால்,செல்வத்தைப் படைத்து இருந்தாலும் அவன் ஏழையே ஆவான்.

 

 

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...