அடைந்தாரைக் காப்பது பெரியோரின் கடமை

 


அடைந்தாரைக் காப்பது பெரியாரின் கடமை.

-----

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால், "குற்றங்கடிதல்" பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். "பெரியாரைத் துணைக்கோடல்" என்னும் அதிகாரத்துள் இரண்டாம் திருக்குறளில், "தெய்வத்தாலாவதுமனிதராலாவது தனக்கு வந்த துன்பங்களை நீக்கும் விதத்தை அறிந்து நீக்கிபின்னர் அது போன்ற துன்பங்கள் வாராதபடிமுன்னமே அறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரைஅவர் மகிழத் தக்கனவற்றைச் செய்துஅவரைத் துணையாக்கிக் கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     தெய்வம் என்பது ஊழைக் குறிக்கும். எனவேஊழால் வரும் துன்பங்களான மழையில்லாமையாலும்அதிக மழையாலும்காற்றுதீபிணி முதலியவற்றாலும் வருவன. இத் துன்பங்கள் தம் முன்னோரையும்கடவுளரையும் நோக்கிச் செய்யும் சாந்தி முதலியவைகளால் நீக்கப்படும்.

 

     மக்களால் வரும் துன்பங்கள் ஆவனபகைவர்கள்வர்சுற்றத்தார்தொழில் புரிவோர் ஆகிய இவர்களால் வருவன. அத் துன்பங்கள் சாமபேததானதண்டம் என்னும் நால்வகை உபாயங்களுள்தக்க உபாயத்தால் நீக்கப்படும்.

 

     துன்பங்கள் வராமல் முற்காத்தலாவதுதெய்வத்தால் வரும் துன்பங்களை,தீ நிமித்தம் அல்லது அறிகுறிகள் ஆகியவைகளால் அறிந்துசாந்திகளால் காத்தல். மனிதரால் வரும் துன்பங்களை அவரது குணம்இங்கிதம்ஒழுக்கம்செயல் ஆகியவற்றால் அறிந்துநால்வகை உபாயங்களுள் ஒன்றால் காத்தல் ஆகும். பேணுதலாவதுஅவர் மகிழும்படி நடந்து கொள்ளுதல்.

 

"உற்றநோய் நீக்கிஉறாஅமை முன்காக்கும்

பெற்றியார்பேணிக் கொளல்".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.  

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய,"முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

பகைசிறிதும் இன்றிப் பறவைகளும் அஞ்ச

இறைவர் துணைவலியான் எய்தும் --- முறைமையால்

உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.   

 

இதன் பொருள் ---

 

     வலியான் --- கரிக்குருவி. "கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி" என்றார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில்.

 

     இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான்.அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன்சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கரிக்குருவியாக பிறந்தான்.

 

     அக் கரிக்குருவியை காகம் உள்ளிட்ட பறவை இனங்கள் தலையில் கொத்தின. இதனால் கரிக்குருவிக்கு தலையில் காயங்கள் உண்டானது. கரிக்குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை.எனவே,கரிக்குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கரிக்குருவி அமர்ந்திருந்தது.அப்போது சிவனடியார் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்தார்.

 

     சிவனடியார்,தன்னோடு இருந்தவரை நோக்கி "தலம்தீர்த்தம்மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார்"என்று மதுரையின் சிறப்பையும்சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்.சிவனடியார் கூறியதைக் கேட்ட கரிகுருவிக்கு சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

 

     அக் கரிக்குருவி மதுரை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது.பின்னர் அங்கயற்கண் அம்மையையும்சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கரிக்குருவி இறைவழிபாடு செய்தது. கரிக்குருவியின் செயலினைக் கண்டதும்,அங்கையற்கண் அம்மை,இறைவனாரிடம் "ஐயனேஇக் கரிக்குருவி வழிபடும் காரணம் என்ன?" என்று கேட்டார்.இறைவனார் கரிக்குருவியின் முற்பிறவியும்இப்பிறவியில் இறைவனை கேட்டறிந்த விதத்தையும் எடுத்துரைத்தார்.

 

     பின்னர் கரிக்குருவிக்கு ஆயுள் பலத்தையும்பிறவித் துன்பத்தையும் போக்கும் மிருத்தியுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது இறைவனை பலவாறு துதித்து வழிபட்டது.பின்னர் இறைவனாரிடம் ஐயனேஎனக்கு ஒரு குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னை துன்புறுத்துகின்றன.” என்றது.

 

     அதனைக் கேட்ட சோமசுந்தரப் பெருமான்திருவுள்ளம் இரங்கி,அப் பறவைகளுக்கு எல்லாம் நீ வலியன் ஆவாய்.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.உடனே கரிக்குருவி வலியன் என்பது அடியேன் மரபில் உள்ள பறவைகளுக்கு எல்லாம் விளங்க வேண்டும். தேவரீர் அடியேனுக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளுக்கும் ஓதி உய்தல் வேண்டும்.” என்று வேண்டியது.

 

     சோமசுந்தரப் பெருமான்,அவ்வாறே ஆகுகஎன்று கூறியருளினார். உடனே அக்குருவியும்அதன் இனமும் சோமசுந்தரர் ஓதியருளிய மந்திரத்தை உச்சரித்து வலியனவாகின.அதனால் "வலியன்" என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கரிக்குருவி சிவனடியை அடைந்தது.

 

     தனக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கிஅத் துன்பம் பின்னும் சாராமல்படிக்குசிவனடியார் சொன்னதைக் கடைப்பிடித்துகரிக்குருவியானதுதனக்கு வந்த துன்பத்தை நீக்கி,பின்னும் பிறவித்துன்பம் சாராமல் இறைவன் திருவடியை அடைந்தது.

 

     கரிக்குருவிக்கே அருள் புரிந்த பரம்பொருள் நம் போன்ற மனிதர்க்கும் அருள் புரியும் என்பதுதான் இதன் உட்கிடக்கை. அடியார்க்கு வந்த துன்பங்களை நீக்கி (உற்ற நோய் நீக்கி) மேலும் துன்புறாதவண்ணம் காக்கும் தன்மை (உறாமை முற்காக்கும் தன்மை) உடையவன் இறைவன். எனவேதன்னை உள்ளன்போடு வழிபடும் அடியவர்க்கு சிவபெருமான் எவ்விதம் அருள்வான் என்பதைத் திருமுறைகளின் வாயிலாகவே அறியலாம்.

 

     இறைவன் திருவடியைத் தொழுபவர்களைதிருமகள் வணங்குவாள் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான். எல்லாரும் விரும்புகின்ற திருமகளே தன்னை வணங்கும் பேறு கிடைக்குமானால்அத்தகைய பெரும்பேற்றினை அளிக்கின்ற சிவபரம்பொருளை நாம் நிச்சயம் வழிபட்டே ஆகவேண்டும்.

          

"கொய்தஅம் மலர்அடி கூடுவார்தம்

மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்

பெய்தவன் பெருமழை உலகம்உய்யச்

செய்தவன் உறைவிடம் திருவல்லமே". --- திருஞானசம்பந்தர்.

 

இதன் பொருள் ---

 

     அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறி மாறிச் செல்லும் இயல்பினை உடைய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும்பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

 

     தம் திருவடியை வணங்குவாரைத் திருமகள் வணங்க வைத்துஉலகம் உய்யப் பெருமழை பெய்யச் செய்தவன் உறைவிடம் திருவல்லம் என்று நாயனார் பாடியருளியதன் அருமை எண்ணி எண்ணி இன்புற்றுகைக் கொள்ளத் தக்கது.

 

     முழுமையான தீயைப் போன்ற திருமேனியின் மேல் திருவெண்ணீற்றை அணிந்துபொன்மலை ஆகிய மேருமலையைப் போல் ஒளி வடிவுடன் திகழுகின்ற எங்கள் பெருமானை இகழ்கின்றவர்களே! நீங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். இறைவன் எல்லோருக்கும் அரியவன்தான். ஆனாலும்அவனைத் தொழுகின்ற அடியவர்க்கு எளிமையானவன் மட்டும் அல்ல. அவருடைய சிந்தையில் பிரியாது விளங்குபவனும் ஆவான். அவன் உங்களால் தொழப்படுகின்ற சிறுதேவர்களாலும் தொழப்படும் பெருமையை உடையவன். அப்படிப்பட்ட பெருமானை நீங்கள் வழிபட்டீர்களானால்உங்களால் முன்பு தொழப்பட்ட சிறுதேவர்களைக் கொண்டேதனது அடியவர்கள் ஆகிய உங்களையும் வணங்குமாறு செய்து,உங்களை உயர்நிலையில் வைப்பான் என்பதை அறிவீர்களாக என்கின்றார் அப்பரடிகள். அவர் பாடி அருளிய தேவாரப் பாடலைக் காண்போம்...

 

"முழுத்தழல் மேனித் தவளப் பொடியன்கனகக் குன்றத்து

எழில் பரஞ்சோதியைஎங்கள் பிரானைஇகழ்திர் கண்டீர்!

தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை,

தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே."

 

     சிவபெருமான் தன் அடியவர்க்கு அருள் புரியும் சிறப்பும்அவனது திருவம்பலத்தைக் கைதொழாதவர் நெஞ்சு உடைந்து துயர் அடைதலும் காட்டி, "திருக்கோவையார்" என்னும் அற்புதமான திருமுறை நூலுள் மணிவாசகப் பெருமான் பாடி உள்ளார்.

 

தாழச் செய்தார் முடிதன் அடிக்

     கீழ் வைத்துஅவரை விண்ணோர்

சூழச் செய்தான் அம்பலம் கை

            தொழாரின்உள்ளம் துளங்கப்

போழச் செய்யாமல்வைவேல் கண்

            புதைத்துபொன்னே! என்னை நீ

வாழச் செய்தாய்சுற்று முற்றும்

            புதை நின்னை வாள்நுதலே! --- திருக்கோவையார்.

 

      தன்னைத் தாழ்ந்து வணங்குவோர் முடிகளைத் தனது திருவடிக் கீழ் வைத்துஅவர்களை விண்ணோர் சூழ்ந்து வணங்குமாறு செய்த பெருமானது திருவம்பலத்தைத் தொழாதவர்களைப் போல என் நெஞ்சை நடுங்க வைத்த பெண்ணேஉன் கூரிய கண்களைப் புதைத்து மேனியை மறைக்காமல் நின்று என்னை வருத்தினாய் எனத் தலைவன் வருந்தியது.

 

     திருச்சிற்றம்பலத்தை வணங்குவோர்களைதேவர்களும் வணங்குவார்கள் என்பதும்திருச்சிற்றம்பலத்தை வணங்காதவர்கள் துயரமுற்று வருந்துவார்கள் என்பதும் மணிவாசகப் பெருமானால் மேற்குறித்த பாடலால் அறிவிக்கப்பட்டது.

 

     வழிபாட்டின் சிறப்பு மேலும் கூறுகையில்"சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்" என்று பெருமானால் திருவாசகத்தில் காட்டப்பட்டது போலதிருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரியாநின்ற இறைவன் திருவடியை வணங்குவோரைவானவர்கள் எல்லோரும் சூழ்ந்து வணங்குவார்கள் என்றும் பின்வருமாறுதிருக்கோவையாரில் பாடி அருளினார் மணிவாசகப் பெருமான்.

 

சோத்து உன் அடியம் என்றோரை,

            குழுமித் தொல் வானவர் சூழ்ந்து

ஏத்தும்படி நிற்பவன் தில்லை

            அன்னாள்இவள் துவள,

ஆர்த்து உன் அமிழ்தும்திருவும்,

            மதியும் இழந்துஅவம் நீ

பேர்த்தும் இரைப்பு ஒழியாய்பழி

            நோக்காய் பெரும்கடலே!   --- திருக்கோவையார்.

 

     தன்னை அடைந்தவர்களுக்கு உற்ற துன்பத்தை நீக்கிபின்னும் துன்பம் வராமல் காக்கின்றவர்கள் பெரியவர்கள். அப்படி இருக்கபெரியவர்களுக்கு எல்லாம் பெரியவன் ஆன இறைவன்தன்னை அடைந்த அடியவர்களை நிச்சயம் காப்பான் என்பது மேற்குறித்த பாடல்களால் அடையும் தெளிவு. "தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியபடிதன்னைத் தொழுகின்ற அடியவர்களின் துயரைத்தைத் தீர்த்து அருளுவது இறைவன் தொழில் ஆகும். தனது அடியவர்களைத் தாங்குகின்ற கடமையும் இறைவனுக்கு உண்டு என்பதைக் காட்ட, "திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல்" என்றார் அப்பர் பெருமான். எல்லாவற்றுக்கும் மேலாகதன்னைத் தொழுகின்ற தேவர்களைக் கொண்டேதனது அடியவர்களையும் தொழுவிப்பான் என்று காட்டியதன் அருமையை உணர்ந்துதெளிந்துஇறைவனை வழிபட்டு உய்வோமாக.

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...