நல்லொழுக்கமே உற்ற துணை

 


நல்லொழுக்கமே உற்ற துணை

-----

     புற ஒழுக்கத்தோடு நில்லாமல்அகவொழுக்கத்தையும் மேற்கொண்டு வாழ்வதே மேன்மையைத் தரும். எனவேஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றவேண்டும் என்றார் திருவள்ளுவ நாயனார். "அறங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால்உயிருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக வருவது ஒழுக்கமே. ஆதலால்ஒழுக்கத்தை எவ்விதத்திலும் குறைவு படாமல் வருந்திப் பாதுகாக்கவேண்டும்என்பதைக் காட்ட,

 

"பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம்,தெரிந்து ஓம்பித்

தேரினும் அஃதே துணை".

 

என்று அருளினார்.

 

     மனம் வாக்குக் காயங்களால் செய்ய வேண்டியவற்றைச் செய்வதும்தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து ஒழுகுவதும்ஒழுக்கம் எனப்படும்.

 

     இதனை விரித்துவாகீச முனிவர் இயற்றிய "ஞானாமிர்தம்"என்னும் நூல் கூறுமாறு காண்க.

 

"பொய்ப்பொறி புணர்க்கும் முப்பொறி உள்ளும்

உள்ளச் செய்தி தெள்ளிதின் கிளப்பின்,

இருள்தீர் காட்சிஅருளொடு புணர்தல்,

அரும்பொறை தாங்கல்பிறன்பொருள் விழையாமை,

 

செய்தநன்று அறிதல்கைதவம் கடிதல்,

பால்கோடாது பகலில் தோன்றல்,

மான மதாணி ஆணின் தாங்கல்,

அழுக்காறு இன்மை,அவாவின் தீர்தல்,

அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை

 

அழல்தோய்வு அன்னர் ஆகிஆனாக்

கழலும் நெஞ்சின் கையற்று இனைதல்,

பன்னரும் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்கு

அறிவும் பொறியும் கழிபெரும் கவினும்,

பெறற்கரும் துறக்கம் தம்மின் ஊஉங்கு

 

இறப்ப வேண்டும் என்று எண் அரும்பெரும் குணம்;

வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள

அறம்பெரிது கரைதல்,புறங் கூறாமை,

வாய்மைகல்விதீமையின் திறம்பல்,

இன்மொழி இசைத்தல்வன்மொழி மறத்தல்,

 

அறிவுநூல் விரித்தல்அருமறை ஓதுதல்,

அடங்கிய மொழிதல்,கடுஞ்சொல் ஒழிதல்,

பயன்நின்ற படித்தல்படிற்று உரை விடுதல்,

காயத்து இயைந்த வீயா வினையுள்

அருந்தவம் தொடங்கல்திருந்திய தானம்,

 

கொடைமடம் படுதல்,படைமடம் படாமை,

அமரர்ப் பேணல்,ஆகுதி அருத்தல்,

ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெரும் கிழமை,

உடம்பிடி ஏந்தி உடல் தடிந்திடுமார்

அடைந்த காலை அவண்இயல் துயரம்

 

தேரார் அல்லர் தெரிந்தும் ஆருயிர்

பெரும் பிறிதாக இரும்பிணம் மிசைஞரின்

ஓராங்குப் படாஅ மாசில் காட்சி,

ஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல்,

இந்தியப் பெரும்படை இரிய நூறும்

 

வன்தறு கண்மை,வாள்இட்டா அங்கு

நோவன செய்யினும் மேவன இழைத்தல்,

தவச் சிறிது ஆயினும் மிகப்பல விருந்து,

பாத்தூண் செல்வம்,பூக்கமழ் இரும்பொழில்,

தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை

 

அன்னையின் தீரா நன்னர் ஆண்மை,

கார்கோள் அன்ன கயம்பல கிளைத்தல்,

கூவல் தொட்டல்,ஆதுலர் சாலை,

அறம்கரை நாவின் ஆன்றோர் பள்ளி,

கடவுள் நண்ணிய தடவுநிலைக் கோட்டம்,

 

இனையவை முதல நினைவரும் திறத்த

புரத்தல் அரத்துறைமறத்துமறை இவற்றின்

வழிப்படாது எதிர்வன கெழீஇ

உஞற்றல் என்ப உணர்ந்திசி னோரே".

 

இதற்குப் பதவுரை ---

 

     பொய்ப்பொறி புணர்க்கும் முப்பொறி உள்ளும் --- நிலையற்ற இந்தப் பரு உடம்பில் கூட்டப்பட்டுள்ள மனம்வாக்குகாயம் என்ற மூன்றாலும் (ஈட்டப்படும் கன்மங்களுள்)

 

     உள்ளச் செய்தி தெள்ளிதின் கிளப்பின்--- மனத்தால் செய்யப்பட வேண்டுவன ஆகிய கன்மங்களை தெளியும்படிச் சொல்வதாயின்,

     

     இருள்தீர் காட்சி--- ஐயம்திரிபு ஆகிய குற்றங்களின் நீங்கிய மெய்யுணர்வு,அருளொடு புணர்தல்--- எக்காலமும் அருள் உணர்வோடு கூடி இருத்தல்அரும் பொறை தாங்கல்--- பொறுக்க முடியாத சினம் உண்டாகிய போதும்பொறுக்க முடியாத துன்பம் உண்டாகிய போதும்அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல்பிறன் பொருள் விழையாமை---  தனது சுகத்திற்காகப் பிறரிடம் உள்ள பொருளைக் கவர விரும்பாமைசெய்த நன்று அறிதல்--- பிறர் தனக்குச் செய்த உதவியைநன்மையை மறவாது இருத்தல்,கைதவம் கடிதல்--- மனத்தில் வஞ்சக எண்ணத்தை ஒழித்தல். பால்கோடாது பகலில் தோன்றல்--- விருப்பு வெறுப்பு இல்லாமல் எங்கும் ஒரு தன்மைத்தாக விளங்கும் சூரியன் போலநண்பர் பகைவர் முதலிய எவரிடத்தும் ஒரு பக்கம் சாயாமல்,நடுவு நிலையோடு இருத்தல்மான மதாணி ஆணின் தாங்கல்--- மானம் என்னும் அணிகலனைப் பெருமையோடு (ஆண்மையோடு) தரித்தல். அழுக்காறு இன்மை--- பிறரிடத்தில் உள்ள செல்வம் முதலிய சிறப்புக்களைக் கண்டு பொறாமைப் படாது இருத்தல். அவாவின் தீர்தல்--- பிறப்பிற்கு ஏதுவாகிய ஆசையில் இருந்து விடுபடுதல். அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை --- பிற உயிர்களுக்குப் பெரும் துன்பம் உண்டான காலத்தில்அழல் தோய்வு அன்னர் ஆகி--- நெருப்பில் இட்டது போன்ற துயரத்தைத் தாமும் அடைந்துஆனா --- அளவுக்கு அடங்காமல்,கழலும் நெஞ்சின் கையற்று இனைதல்--- நெகிழ்ந்து உருகும் உள்ளத்தினராய்துன்ப மிகுதியால் செயலற்று வருந்துதல்பன்ன அரும் சிறப்பின் மன்ன உயிர்த் தொகைகட்கு --- சொல்லுதற்கு அரிய சிறப்பினை உடைய நிலைபெற்ற உயிர்த் தொகுதிகளுக்குஅறிவும்  பொறியும் --- ஞானமும்செல்வமும்கழிபெரும் கவினும்--- மிகப் பெரிய வடிவழகும்பெறற்கு அரும் துறக்கம் --- பெறுதற்கு அரிய சுவர்க்க இன்பம்தம்மின் ஊஉங்கு --- தம்மைக் காட்டிலும்இறப்ப வேண்டும் என்று எண் அரும்பெரும் குணம்--- மிகுதியாக வேண்டும் என்று எண்ணுகின்ற அரிய பெரிய குணம் (ஆகிய இவைகளே ஆகும்)

 

     மனத்தால் தோன்றும் நல்ல நினைவுகளைச் சொல்லிஅல்லாத வழித் தோன்றும் தீய நினைவுகளையும் குறிப்பால் பெற வைத்த வாகீச முனிவர்இனிஅந்த நினைவுகளின் வழிசொல்லால் செய்யப்படும் வினைகளை இனிக் கூறுகின்றார்.

 

     வாக்கொடு சிவணிய நோக்கின் --- வாக்கினால் பொருந்திய வினைகளைக் கூறுங்கால்மீக்கொள அறம்பெரிது கரைதல்--- மேன்மையான அறங்களை எடுத்துக் கூறுதல்புறங் கூறாமை--- ஒருவரைக் காணாத இடத்து,அவரைப் பற்றிப் பிறரிடம் இகழ்ந்து கூறாது இருத்தல். வாய்மை--- உண்மையே பேசுதல்கல்வி--- உயர்ந்த அறிவு நூல்களைக் கற்றல்தீமையின் திறம்பல்--- தீய சொற்களில் இருந்து நீங்குதல்,இன்மொழி இசைத்தல்--- இனிய சொற்களைக் கூறுதல்வன்மொழி மறத்தல்--- வன்மை தரும் சொற்களை அடியோடு மறந்து விடுதல்அறிவுநூல் விரித்தல்--- அறிவு நூல்களை ஓதுதல்,அருமறை ஓதுதல்--- அரிய வேத ஆகமங்களை ஓதுதல்அடங்கிய மொழிதல்--- பணிவான செற்களைச் சொல்லுதல்,கடுஞ்சொல் ஒழிதல்--- கடுமையான சொற்களைச் சொல்லாது இருத்தல்பயன் நின்ற படித்தல்--- பிறர்க்குப் பயன்படும் சொற்களைச் சொல்லுதல்படிற்று உரை விடுதல்--- பயன் இல்லாத ஒஎற்றுச் சொற்களைப் பேசாது விடுத்தல்,

 

     (இனிகாயத்தால் (உடம்பால்) செய்யப்படும் வினைகள் விரித்துக் கூறப்படுகின்றன)

 

     காயத்து இயைந்த வீயா வினையுள் --- உடம்பினால் செய்யட்டும் கெடாத வினைகளைச் சொல்லப் புகுங்கால்அருந்தவம் தொடங்கல்--- மனமானது ஐம்புலன்களின் வழிப் படர்வதை விடுத்துவிரதங்களான உண்டி சுருக்குதல் முதலியவற்றை மேற்கொண்டு,அரிய தவத்தைச் செய்தல்திருந்திய தானம்--- அறநெறியில் வந்த பொருள்களைத் தக்கார்க்கு மகிழ்ந்து கொடுத்தல்கொடைமடம் படுதல்--- இன்னார்இனியார் என்று பாராது,தன்னிடம் உள்ளதை,வரையாது கொடுத்தல்,படைமடம் படாமை--- போரில் வீரர் அல்லாதார் மேலும்புறமுதுகு இட்டார் மேலும்புண்பட்டார் மேலும்,மூத்தோர்,இறையோர் மேலும் செல்லாமை,அமரர்ப் பேணல்--- தேவர்களைப் போற்றி வழிபடுதல்ஆகுதி அருத்தல்--- வேள்விகளைச் செய்துஆகுதிகளைத் தேவர்க்கு உண்ணக் கொடுத்தல்ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெரும் கிழமை--- தனது நிலைக்கு ஏற்ற ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கும் சிறப்புஉடம்பிடி ஏந்தி உடல் தடிந்திடுமார் அடைந்த காலை --- வாளை ஏந்திக் கொண்டுதனது உடலை வெட்டுவதற்குப் பலர் கூடி வந்த போதுஅவண் இயல் துயரம் தேரார் அல்லர் --- அவ்விடத்து தனது உடலும் உள்ளமும் என்ன துயரத்தை அடையும் என்பதை தெரிந்தும் --- தெரிந்து இருந்தும்ஆருயிர் பெரும் பிறிதாக --- அருமையான உயிரை (புலால் உணவிற்காக) உதன் உடலில் உர்நுத பிரியச் செய்துஇரும் பிணம் மிசைஞரின் --- பிணம் ஆகிய அந்த உடலைத் தின்பவருடன்ஓராங்குப் படாஅ --- நட்புக் கொண்டு கூடாதுமாசில் காட்சி---  குற்றம் அற்ற அறிவு உடைமைஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல்--- கொலைகளவுகள் உண்டல்குரு நிந்தைபொய் என்று சொல்லப்பட்ட ஐம்பெரும் பாதகமாகிய ஆழ்கடலில் வீழாமல் தப்புதல்இந்தியப் பெரும்படை இரிய நூறும் வன் தறுகண்மை--- இந்திரியங்கள் ஆகிய வெல்லுதற்கு அரிய பெரிய படையானது பின்னிட்டு ஓடுமாறுஅதனை வென்று இழக்கும் வலிய பேராண்மை,வாள்இட்டா அங்கு நோவன செய்யினும் மேவன இழைத்தல்--- வாளால் அறுப்பது போன்ற பெரும் துன்பத்தை ஒருவர் தனக்குச் செய்தாலும்அவரே பின் ஒரு காலத்தில் வந்து,ஒரு செயலை முடித்துக் கொடுக்கும்படி வேண்டி நிற்கும் நிலை வந்தால்பழையதை நினைத்துப் பாராதுஅவர் வேண்டியதைவேண்டியவாறே செய்து கொடுத்தல்தவச் சிறிது ஆயினும் மிகப்பல விருந்து--- தன்னிடம் உள்ளது மிகச் சிறியது ஆயினும்மிகப் பலராகிய விருந்தினரோடு,பாத்தூண் செல்வம்--- பகிர்ந்து உண்டு மகிழும் சிறப்புபூக்கமழ் இரும்பொழில்--- பூக்களின் மணம் கமழும் பெரிய சோலைகளை அமைத்தல்தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை --- தன்னுடைய மனையாளைத் தவிர,பிற மாதரை,அன்னையின் தீரா நன்னர் ஆண்மை--- தனது தாயைப் பொன்று நினைத்துப் பார்ப்பதில் நீங்காத நல்ல பெரிய ஆண்மைகார்கோள் அன்ன கயம் பல கிளைத்தல்--- கடலைப் பொன்ற பெரிய ஏரி,குளம் பலவற்றை அமைத்தல்கூவல் தொட்டல்--- கிணறு அமைத்தல், (ஏரி குளங்கள் கிணறுகளை எல்லாம் பிறர் அரும்பாடு பட்டுஉயிர்களின் நன்மைக்காக வைத்துச் சென்று உள்ளனர். அவற்றை எல்லாம் தன்னலம் கருதித் தூர்த்தல் பெரும்பாவம்) ஆதுலர் சாலை--- மருத்துவச் சாலையை உண்டாக்குதல்அறம் கரை நாவின் ஆன்றோர் பள்ளி--- நல்லறங்களை எடுத்துச் சொல்லும்நாவினை உடைய ஆன்றோர்கள் வாழ்தற்கு உரிய தவப்பள்ளிகளை அமைத்தல்கடவுள் நண்ணிய தடவுநிலைக் கோட்டம்--- கடவுளர்கள் எழுந்தருளி உள்ள உயர்ந்த ஆலயங்களை எடுத்தல்,இனையவை முதல --- இத் தன்மைகளை உடையவை முதலாக,நினைவரும் திறத்த புரத்தல் --- நினைத்தற்கு அரிய புண்ணியச் செயல்களைச் செய்தல்,

 

     அரத்துறை--- இவையே மனம் வாக்கு காயத்தால் ஆற்றவேண்டிய அறத்துறை வினைகளை ஆவன.

 

     மறத்துமறை --- இவற்றிற்கு மாறாக பாவம் என்பதுஇவற்றின் வழிப்படாது --- இத்தகைய புண்ணியச் செயல்களைச் செய்யாதுஎதிர்வன கெழீஇ உஞற்றல் என்ப --- இவற்றிற்கு மாறுபாடானவற்றைபொருந்தச் செய்தல் என்று சொல்லுவர்உணர்ந்திசினோரே --- இந்த உண்மையை உணர்ந்த பெரியோர்.

 

     ஆற்றிலே வெள்ளம் வரும் முன்னதாக அணைகட்ட வேண்டும். வெள்ளம் வந்த பிறகு அணைகட்டுதல் அறிவீனம். முடியவும் முடியாது. அதுபோலவேவாழ்நாள் உள்ளபோதே அறச் செயல்களைச் செய்து போகும் வழிக்குத் துணை தேடிக் கொள்ளுதல் அறிவுடைமை. வாழ்நாள் முடிவில் இயமன் வந்து குறுகும் காலம் எது என்று தெரியாது. எனவே,உள்ளபோதே அறச் செயல்களைச் செய்தல் வேண்டும்.

 

     "ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர்! அகங்காரப் பேய் பிடித்தீர்,ஆடுதற்கே அறிவீர்! கூற்று வருங்கால் அதனுக்கு எது புரிவீர்! ஐயோ!" என்று உலகவரைப் பார்த்து இரங்குகின்றார் வள்ளல் பெருமான்.

 

     மாடு ஆடு முதலிய விலங்கினங்கள் இறந்தால்அவற்றின்தசையும் மயிரும் தோலும் கொம்பும் மக்களுக்குப் பயன்படும். மண் பாண்டம் உடைந்தால் ஓடாகப்  பயன்பெறும். கீழே விழுந்த மரம் கல் முதலியவும் பயனாகும். வீடு இடிந்தாலும் மேலே உள்ள பொருட்கள் பலவகையாகப் பயன்பெறும். காடு அழிந்தால் விறகு ஆகும். நிலையில்லாத இந்த மாய உடல்அதில் குடிகொண்டு உள்ளஉயிர் நீங்கியபின் எதற்குப் பயனாகும்?

 

"குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்

உடல் உடைந்தால் இறைப் போதும் வையாரே". 

 

என்றார் திருமூல நாயனார்.

 

இதற்கும் மேல் ஒருபடி சென்று,

 

"பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்என் ஆகும்

மண்ணின் குடம் உடைந்தக் கால்?"

 

என்கின்றார் ஔவையார்.

 

     எனவேஉடம்பு உள்ளபோதே அறச் செயல்களைச் செய்யவேண்டும். காரணம்,உலகில் நெல் அறுப்பதற்கும்பூப் பறிப்பதற்கும்கல் வெட்டுதற்கும்மரம் அறுப்பதற்கும் ஒவ்வோர் காலக் கணக்கு உண்டு. நம்முடைய வாழ்நாள் வெறும் புல்லைப் போன்றது. மிகக் கொடியவன் ஆன கூற்றுவன் நம்முடைய வாழ்நாள்  என்னும் புல்லை அறுக்க எப்பொழுது வருவான் என்று உறுதியாக எண்ண முடியாது. அவன் நினைத்தபொழுது எல்லாம் வருவான். ஏனவேஅறச் செயலைச் செய்வதற்குக் காலம் நேரம் பார்த்தல் கூடாது.

 

மாடுஆடு விலங்கு இறப்பில்,தசைமயிர்தோல்

    கொம்பு உதவும்,மட்கலம் தான்

ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும்,வீழ்

    மரம் கல்லும் உபயோகம் தான்,

வீடானது இடியின் மேற் பொருள் உதவும்,

    காடு அழியின் விறகு ஆம்,மாயக்

கூடு ஆகும் தேகம் இது வீழின்,தற்கு

    உதவும் நீ கூறாய் நெஞ்சே.         --- நீதிநூல்.

 

 நெல்அறுக்க ஒர்காலம்,மலர்கொய்ய

   ஓர்காலம்,நெடிய பாரக்

கல் அறுக்க ஓர்காலம்,மரம் அறுக்க

   ஓர்காலக் கணிதம் உண்டு,

வல்லரக்கன் அனைய நமன் நினைத்தபோது

   எல்லாம் நம் வாழ்நாள் என்னும்

புல் அறுக்க வருவன்னில் நெஞ்சமே!

   மற்று இனி யாம் புகல்வது என்னே.--- நீதிநூல்.

 

     துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளும்இக் கருத்தைஏ வலியுறுத்திப் பாடி உள்ளார்.

 

கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்

உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்

வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்

பெருகுதற்கண் என்செய்வார் பேசு. --- நன்னெறி.

 

     வெள்ளம் வரும் முன்ஆற்றில் அணைகட்டி வைக்காதவர் வெள்ளம் வந்தபிறகு என்ன செய்யக்கூடும்?அது போஉயிரைக் கவரந்து செல்கின்ற கொடிய கூற்றுவன் ஒருவனைக் கொல்வதற்கு நெருங்கும் முன்னமே மனம் கனிந்து அறங்களைச் செய்து ஈடேற்றம் பெறவேண்டும்.

 

     எனவேஉயிருக்கு நன்மை தருவதாகிய நல்லொழுக்கத்தைத் தவறாமல் போற்றிஅறச்செயல்களை ஆற்றி வரவேண்டும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...