கடுகம் 4

 “பகைமுன்னர் வாழ்க்கை செயலும், தொகைநின்ற

பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும்; - முன்தன்னைக்

காய்வனைக் கைவாங்கிக் கோடலும், இம்மூன்றும்

சாவ உறுவான் தொழில்.” -- திரிகடுகம்.


    தன் பகைவர் முன்னே செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும்; தொகுதியாக நின்ற மாடுகளின் நடுவே கோல் இல்லாமல் செல்லுதலும்; முன்னே நின்று தன்னை வருத்துபவனை,  முன் விட்டு நீக்கி, பின் அவனோடு நட்புக் கொள்ளுதலும் ஆகிய இம் மூன்று செயல்களும் சாகவேண்டியவனுடைய செய்கைகளாம். (சாவினை ஒத்த துன்பம் தரும் செயல்கள் என்றபடி)


பகைவர்களுக்கு எதிரில் தனது செல்வநிலையைக் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோல் இல்லாது மாட்டு மந்தையில் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும். 


No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...