“அறன் நட்டான் நன்னெறிக்கண் நிற்க, அடங்காப்
புறன் நட்டான் புன்னெறிப் போகாது; - புறன்நட்டான்
கண்டு எடுத்துக் கள்களவு சூது கருத்தினால்
பண்டுஎடுத்துக் காட்டும் பயின்று.”. – சிறுபஞ்சமூலம்
அறத்தை விரும்பியவன் நல்வழியில் நிற்பதற்கு, நீதிக்கு அறத்துக்குப் புறமாகிய புன்மையான வழிகளில் செல்லமாட்டான். அறத்துக்குப் புறம்பாகிய காரியத்தை விரும்பியவன், கள் குடித்தலையும், களவு செய்தலையும், சூதாடலையும், தன் உள்ளத்தினாலே எண்ணிப் பார்த்து, அவற்றை நல்லன என்று எடுத்துக்கொண்டு, அவற்றில் பழகி, அவற்றால் நேர்ந்த கெடுபலன்களை உலகுக்கு விளக்கிக் காட்டுபவன் ஆவான்.
No comments:
Post a Comment