“வழங்காத் துறை இழிந்து நீர்ப்போக்கும், ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும், - உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும், இம் மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி. -- திரிகடுகம்.
ஆறு முதலியவற்றில் யாவரும் இறங்க விரும்பாத துறையில் இறங்கி, பெரும் நீரில் செல்லுதலும்; தனக்கு விருப்பமில்லாத வேசையர் தோளைத் தழுவி மகிழ்தலும், வயிற்றை நிரப்பும்பொருட்டு அடுத்த ஊர் விருந்துக்குச் செல்லுதலும், ஆகிய இம் மூன்றும் ஒருவனுக்குத் துன்பத்தைக் காட்டும் வழி ஆகும்.
ஆறு முதலியவற்றிற் பழகாத துறையில் இறங்கிச் செல்லுதலும், தன்மேல் பற்றில்லாதவளைச் சேர்தலும், வயிற்றை நிரப்பும்பொருட்டு அடுத்த ஊர் செல்லுதலும் இன்பமன்றித் துன்பத்தையே செய்யும்.
No comments:
Post a Comment